வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் அவியல்

Photo of Cabbage aviyal by Krishnasamy Vidya Valli at BetterButter
648
3
0.0(0)
0

முட்டைகோஸ் அவியல்

Feb-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் அவியல் செய்முறை பற்றி

அவியல் என்றால் எல்லா காய்களும் வேண்டுமா என்ன? வீட்டில் இருக்கும் முட்டைகோஸைக்கொண்டு செய்தால் என்ன ? என்று தோன்றியதன் விளைவு இந்த இந்த ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது -1 கப்
  2. உப்பு -1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. புளி -1/2 நெல்லிக்காய் அளவு
  5. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  7. அரைக்க
  8. தேங்காய் துருவல் -1/4 கப்
  9. பச்ச மிளகாய் -1 பெரியது
  10. மிளகாய் வத்தல் -1
  11. சீரகம் -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நறுக்கிய கோஸை மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்
  2. பாதி வெந்ததும் புளியை கரைத்து சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்.
  4. அரைத்த விழுதை சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைத்து கிளறி இறக்கவும்
  5. தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளி போட்டு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்