வீடு / சமையல் குறிப்பு / கடாய் வெஜ் கிரேவி

Photo of Kadai Veg Gravy by Priyadharshini Selvam at BetterButter
605
3
0.0(0)
0

கடாய் வெஜ் கிரேவி

Feb-23-2018
Priyadharshini Selvam
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடாய் வெஜ் கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு உகந்த கிரேவி இது. எப்போதும் செய்யும் குருமா போல தான். ஆனால் சிறு மாற்றங்கள் உடன் வட இந்திய பாணியில் ருசியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1
  3. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  4. மஞ்சத்தூள் 1/4 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  8. முந்திரி விழுது 1/2 கப்
  9. பிரெஷ் கிரீம் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  12. தண்ணீர் தேவையான அளவு
  13. கசூரி மேதி 1 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி இலை அலங்கரிக்க
  15. விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் 2 கப்
  16. முழு கரம் மசாலா:
  17. சீரகம் 1/2 தேக்கரண்டி
  18. சோம்பு 1/2 தேக்கரண்டி
  19. பட்டை 1
  20. கிராம்பு 3
  21. ஏலக்காய் 3
  22. பிரிஞ்சி இலை 2
  23. அன்னாசிப்பூ 2

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு கரம் மசாலா பொருட்கள் சேர்த்து வணக்கவும்.
  2. இதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தக்காளியை சேர்த்து வணக்கவும்
  4. இதில் மசாலா தூள்களை சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்கு வேகும் வரை வதக்கவும்
  5. மசாலா ஒன்று போல் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்
  6. ஒரு கொதி வந்ததும் விருப்பமான காய்கறிகள் நறுக்கி சேர்க்கவும்
  7. மசாலவுடன் சேர்த்தவாறு கலக்கவும்
  8. தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  9. 10 நிமிடம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது சேர்த்து கிளறி வேக வைக்கவும்
  10. தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  11. வெந்ததும் கசூரி மேதி இலைகளை நசுக்கி சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள், பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்