கொத்துமல்லி வாடி | Kothmir Wadi in Tamil

எழுதியவர் sangeeta khanna  |  29th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kothmir Wadi by sangeeta khanna at BetterButter
கொத்துமல்லி வாடிsangeeta khanna
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2381

0

கொத்துமல்லி வாடி recipe

கொத்துமல்லி வாடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kothmir Wadi in Tamil )

  • கடலை மாவு 3/4 கப்
  • நறுக்கிய கொத்துமல்லி கீரை 2 கப்
  • உப்பும் மிளகும் சுவைக்கேற்ற அளவு
  • சீரகத் தூள் 1/2 தேக்கரண்டி
  • இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு (உங்கள் விருப்பம்) சிவப்பு மிளகாய்
  • எள்
  • கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • சீரகம்
  • எண்ணெய் 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு

கொத்துமல்லி வாடி செய்வது எப்படி | How to make Kothmir Wadi in Tamil

  1. பட்டியலில் உள்ள முதல் 6 பொருள்களை எடுத்து ஒன்றாகப் பிசைந்துகொள்ளவும். அப்போதுதான் கொத்துமல்லி இலைகள் தண்ணீரை வெ ளியேற்றும்.
  2. சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவைத் தயாரித்துக்கொள்க. ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதன் மீது மாவைச் சமமாகப் பரப்பவும்.
  3. இந்தத் தட்டை ஒரு ஸ்டீமரில் வைத்து கத்தியில் எதுவும் ஒட்டாமல் வெளிவரும்வரை வேகவைக்கவும். இதை ஆறவிடவும்.
  4. தாளிப்புக்கு, எண்ணெயைச் சூடுபடுத்தி பெருங்காயத்தைச் சேர்த்து அதனோடு சிவப்பு மிளகாய், கடுகு, எள் விதைகளைச் சேர்க்கவும். இவை வெடிக்கும்வரை வறுக்கவும்.
  5. வேகவைத்தக் கேக்கை எடுத்து முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும். இந்தத் தாளிப்பை அதன் மீது ஊற்றிச் சுண்டவும்.
  6. கொஞ்சம் எலுமிச்சைச் சாறைத் தெளித்து பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

மீந்துபோன வேகவைத்த கேக்கை உறையவைத்து, பின்னர் உடைத்து, வித்தியாசமாகத் தோன்றும் ஒரு துரித சுவையான சிற்றுண்டியை அதே விதத்தில் பதனிடவும்

Reviews for Kothmir Wadi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.