வீடு / சமையல் குறிப்பு / தயிர் பனீர் வெஜ் கபாப்

Photo of Curd Paneer Veg Kebab by Sowmya Sundar at BetterButter
386
6
0.0(0)
0

தயிர் பனீர் வெஜ் கபாப்

Mar-03-2018
Sowmya Sundar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் பனீர் வெஜ் கபாப் செய்முறை பற்றி

தயிர் மற்றும் பனீர் சேர்த்து செய்யும் சுவையான ஸ்னாக். டீப் ஃப்ரை செய்யாமல் தவா வில் டோஸ்ட் செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -1 கப்
  2. கெட்டி தயிர் -1/2 கப்
  3. மிளகாய் தூள் -1/2 டீ ஸ்பூன்
  4. மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள்-1/2 டீ ஸ்பூன்
  6. உப்பு
  7. பிரட் க்ரம்ஸ் -1/4 கப்
  8. கார்ன் ஃப்ளோர் -2 டேபிள் ஸ்பூன்
  9. கடலை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  10. எண்ணெய் வறுக்க
  11. வெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , வெண்ணெய் கடலை மாவு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்க்கவும்
  2. அவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பின்னர் அதை உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும்
  4. கடாயில் கடலை மாவு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். அப்போது தான் அதில் கபாப் களை தோய்த்து போடும் போது பச்சை வாசனை இல்லாமல் இருக்கும்.
  5. தவாவில் வெண்ணெய் தடவி காய்ந்ததும் அதில் கடலை மாவில் தோய்ந்த கபாப் களை அடுக்கி மிதமான தீயில் வைத்து நன்றாக ஒரு பக்கம் ரோஸ்ட் ஆனதும் மறுபக்கம் திருப்பி ரோஸ்ட் செய்து எடுக்கவும்
  6. கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்