வீடு / சமையல் குறிப்பு / Tres leches cake/Three milk cake

Photo of Tres leches cake/Three milk cake by IrsHanA M at BetterButter
356
8
0.0(2)
0

Tres leches cake/Three milk cake

Mar-04-2018
IrsHanA M
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Tres leches cake/Three milk cake செய்முறை பற்றி

Sponge cake soaked in three kinds of milk..

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • கிட்ஸ் பர்த்டே
 • மெக்ஸிகன்
 • விஸ்கிங்
 • பேக்கிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கேக் செய்ய:
 2. மைதா மாவு-1/2 கப்
 3. பேக்கிங் பவுடர்-3/4 டீஸ்பூன்
 4. உப்பு-1/8 டீஸ்பூன்
 5. முட்டை-2
 6. சர்க்கரை-1/2 கப்
 7. பால்-1 டேபிள்ஸ்பூன்
 8. வெனிலா எசன்ஸ்-1/2 டீஸ்பூன்
 9. 2)மில்க் சாஸ் செய்ய:
 10. எவாப்பரேடட் மில்க்-1/2 கப்
 11. கண்டென்ஸ்ட் மில்க்-1/2 டின்
 12. ஹெவி க்ரீம்/பால்-1/4 கப்
 13. 3)டாப்பிங் செய்ய:
 14. விப்பிங் க்ரீம் பவுடர்-1 பாக்கெட்
 15. பால்-1/2கப்
 16. சர்க்கரை-2 டீஸ்பூன்(பொடித்தது)
 17. வெனிலா எசன்ஸ்-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. 1)கேக் செய்முறை:
 2. அவன்/குக்கரை 10நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்.
 3. முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை பகுதியை தனியாக இரண்டு பவுள்களில் பிரித்து வைத்து கொள்ளவும்.
 4. மைதா,பேக்கிங் பவுடர் மற்றும் உப்பை ஒன்றாக கலந்து வைக்கவும்.
 5. இப்போது பிரித்து வைத்திருக்கும் மஞ்சள் கருவோடு சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
 6. இதனுடன் வெனிலா எசன்ஸ்,பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 7. மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளவும்.
 8. மற்றொரு பவுளில் வைத்து இருக்கும் முட்டையின் வெள்ளை கருவை நன்றாக நுரைத்து வரும் வரை அடித்து கொள்ளவும்
 9. இதனை சிறிது சிறிதாக மைதாக கலவையுடன் மென்மையாக சேர்க்கவும்.
 10. இதனை ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ப்ரீஹீட் செய்த குக்கரில் 40-50 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 11. கேக் தயார்..
 12. 2)மில்க் சாஸ் செய்ய:
 13. எவாப்பரேடட் மில்க்,கண்டன்ஸ்டு மில்க்,பால் மூன்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
 14. 3)டாப்பிங் செய்ய:
 15. விப்பிங் பவுடருடன் பால் சேர்த்து நன்றாக அடித்து பொடித்த சர்க்கரை மற்றும் வெனிலா எஸன்ஸ் சேர்த்து கெட்டியாக அடித்து எடுக்கவும்.
 16. 4)அசம்பளிங்:
 17. கேக் சூடு ஆறியதும் அதில் ஸ்கியூவரால்(Skewer) துளைகள் போட வேண்டும்.
 18. இதில் செய்து வைத்திருக்கும் மில்க் சாஸை ஊற்ற வேண்டும்.(1/4 கப் சாஸை தனியாக வைத்து கொள்ளவும்)
 19. இதன் மேல் விப்பிங் க்ரீம் வைத்து அலங்கரித்து கொள்ளவும்.
 20. இதை ஒரு மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறும் போது ஏற்கனவே தனியாக எடுத்து வைத்திருக்கும் மில்க் சாஸ் 2ஸ்பூன் அதன்மேல் ஊற்றி பரிமாறவும்.
 21. (பழங்கள் வைத்தும் அலங்கரிக்கலாம்)
 22. (சதுரமாக வெட்டி டாப்பிங் செய்தது)
 23. ஸாஃப்டான மில்க் கேக் தயார்..

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Amazing tres leches

Waheetha Azarudeen
Mar-04-2018
Waheetha Azarudeen   Mar-04-2018

Sooper

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்