வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் புட்டிங் விப்ட் கிரீம்

Photo of Chocolate pudding with whipped cream by Asiya Omar at BetterButter
404
6
0.0(0)
0

சாக்லேட் புட்டிங் விப்ட் கிரீம்

Mar-06-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் புட்டிங் விப்ட் கிரீம் செய்முறை பற்றி

பார்ட்டியில் செய்து அசத்தலாம்.சூப்பர்.

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டியாக காய்ச்சிய பால் -1/2 லிட்டர்
  2. கோகோ பவுடர் -3 மேஜைக்கரண்டி
  3. கார்ன் மாவு 2 மேஜைக்கரண்டி
  4. சர்க்கரை-150 கிராம்
  5. வெண்ணெய் -50 கிராம்
  6. வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
  7. உப்பு - பின்ச்
  8. விப்பிங் கிரீம் செய்ய :-
  9. இன்ஸ்டெந்ட் டெய்ரி விப் -3 மேஜைக்கரண்டி
  10. காய்ச்சிய பால் -100-125 மில்லி
  11. அலங்கரிக்க செர்ரி பழங்கள்.

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் சரியான அளவில் தயார் செய்யவும்.
  2. பாலைக் காய்ச்சி எடுக்கவும்.
  3. ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி உருகிய வெண்ணெய் விடவும்.அத்துடன் சர்க்கரை,கோகோ பவுடர்,கார்ன் மாவு,தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.கட்டியொல்லாமல் கரைக்கவும்.அடுப்பை மீடியம் ப்லேமில் வைத்து கெட்டியாகும் படி செய்து அணைக்கவும்.
  4. திக்காக வரும்,வெண்ணெய் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  5. அதனை ஒரு பவுலில் கொட்டி செட் செய்யவும்.கட்டியிருக்கக் கூடாது.
  6. கவர் செய்து ப்ரித்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்
  7. இனி விப்பிங் கிரீம் செய்ய வேண்டும்.ஒரு பவுலில் டெய்ரி விப்,பால்,சேர்த்து நன்கு அடிக்கவும்.
  8. ஐந்து நிமிடம் அடித்த பின்பு வெண்ணெய் போல் வரும்.
  9. இப்பொழுது விப்பிங் கிரீம் ரெடியாகிவிட்டது.
  10. தயார் ஆன சாக்லேட் புட்டிங் ப்ரிட்ஜில் இருந்து எடுத்து பவுலில் 3 கரண்டியளவு எடுத்து வைக்கவும்.அதன் மேல் விப்பிங் கிரீம் வைத்து செர்ரி வைக்கவும்.
  11. எடுத்து சாப்பிட மிக சுவை.
  12. யம்மி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்