மலாய் பேடா | Malai Peda in Tamil

எழுதியவர் Adhi Venkat  |  6th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Malai Peda by Adhi Venkat at BetterButter
மலாய் பேடாAdhi Venkat
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1

0

மலாய் பேடா recipe

மலாய் பேடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Malai Peda in Tamil )

 • பனீர் - 200 கிராம்
 • கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்
 • ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
 • வண்ணம் விருப்பப்பட்டால் - சிறிதளவு
 • அலங்கரிக்க - உலர்பழங்கள்

மலாய் பேடா செய்வது எப்படி | How to make Malai Peda in Tamil

 1. பனீரை உதிர்த்து மிக்சியில் அல்லது ப்ளெண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
 2. ஒரு கடாயில் அரைத்த பனீருடன், கண்டெண்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
 3. நிதானமானத் தீயில் கைவிடாமல் கிளறவும்.
 4. கடாயின் ஓரங்களில் ஒட்டாமல் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
 5. இறக்குவதற்கு முன் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
 6. கலவையை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்..
 7. ஆறியதும் வேண்டிய வடிவத்தில் செய்து உலர்பழங்களால் அலங்கரிக்கவும்.
 8. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பரிமாறவும்.

எனது டிப்:

கலருக்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்க்கலாம்.

Reviews for Malai Peda in tamil (0)