வீடு / சமையல் குறிப்பு / க்ரீமி மேக்ரோனி

Photo of Creamy Maroni by Banupriya Jawahar at BetterButter
124
5
0.0(0)
0

க்ரீமி மேக்ரோனி

Mar-12-2018
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரீமி மேக்ரோனி செய்முறை பற்றி

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் பதார்த்தம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேக்ரோனி 100 கிராம்
  2. மைதா 3 மேஜைக்கரண்டி
  3. பட்டர் 50 கிராம்
  4. பால் 200 மிலி
  5. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி
  6. பெல்லாரி 1
  7. ப.மிளகாய் 2
  8. மொஸரெல்லா சீஸ் 50 கிராம்
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேக்ரோனியில் தேவையான அளவு உப்பு சேர்த்து 7 - 10 நிமிடம் வேகவிடவும்
  2. வெந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும்
  3. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த வெங்காயம், ப.மிளகாயை வதக்கவும்.
  4. கடாயில் பட்டர் சேர்த்து இளகியதும் மைதாவை கிண்டியபடி மெதுவாக சேர்க்கவும்.
  5. மைதாவை கிண்டியவாறே,பாலை மெதுவாக சேர்க்கவும்.
  6. மிளகுத்தூள் சேர்க்கவும்.
  7. வேக வைத்த மேக்ரோனியை சேர்த்து கிளறவும்.
  8. மேக்ரோனி, மைதா பால் கலவை ஒன்று சேர்ந்து கலந்ததும், வதக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்க்கவும்
  9. சீஸை மேற்புறம் முழுவதுமாக துருவி விட்டு அடுப்பை அணைக்கவும்.
  10. சுவையான க்ரீமி மேக்ரோனி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்