வீடு / சமையல் குறிப்பு / பூரணம் வைத்த பாகற்காய் வறுவல்

Photo of Stuffed Roasted Bitter Gourd | Bharwan Karela by Deepali Jain at BetterButter
737
175
4.7(0)
0

பூரணம் வைத்த பாகற்காய் வறுவல்

Mar-22-2016
Deepali Jain
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • நார்த் இந்தியன்
 • பான் பிரை
 • கண்டிமென்ட்ஸ்
 • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. 1 கிலோ பச்சை மாங்காய்
 2. 1 கிலோ பாகற்காய்
 3. 4 தேக்கரண்டி மல்லித்தூள்
 4. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 5. 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
 6. 21/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 7. சுவைக்கேற்ற உப்பும், பாகற்காயில் தேய்ப்பதற்குக் கொஞ்சமும்
 8. 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய், வறுப்பதற்கு

வழிமுறைகள்

 1. பாகற்காயைச் சுத்தமாகக் கழுவிக்கொள்க. கத்தியால் பாகற்காயின் நீட்சிகளை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். சீவியத்தை தூக்கியெறித்துவிட வேண்டாம்.
 2. பாகற்காயை நீளவாக்கில் எளிதில் திறப்பதற்காக முனைகள் பிரியாமல் வெட்டிக்கொள்க. பாகற்காயின் உள்ளும் புறமும் உப்பு தேய்த்து வெயிலில் இரண்டொரு மணி நேரம் வைக்கவும்.
 3. இதற்கிடையில், மாங்காயின் தோலை உரித்து துருவிக்கொள்க. உப்பிட்ட பாகற்காயை நன்றாகக் கழுவி அதிகப்படியானத் தண்ணீரைப் பிழிந்துவிடவும். பாகற்காய்ச் சீவல்களையும் கசப்பு போக பிழிந்துகொள்க. கசப்புச் சாறை நீங்கள் சேகரித்துக்கொள்ளலாம்.
 4. இப்போது சீவல்கள், மசாலாக்கள், பச்சை மாங்காய் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். உங்கள் கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் பயன்படுத்தி, பிளந்த பாகற்காயைத் திறந்து தாராளமாக தயாரித்து வைத்துள்ள பூரணத்தை நிரப்பவும்.
 5. தட்டையான அடிப்பாகமுள்ள வானலியில் கடுகு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக்கொள்க. இப்போது மெதுவாக பாகற்காயை அடுத்தடுத்து திருப்புவதற்குப் போதுமான இடம்விட்டு வைக்கவும்.
 6. சிறு தீயில் வேகும்வரை வறுக்கவும். சில நிமிடங்கள் சீக்கிரம் வேகுவதற்காக மூடி வைக்கலாம். உங்கள் விருப்பத்திற்கேற்ப பக்க உணவாகவோ ஊறுகாயாகவோ பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்