வீடு / சமையல் குறிப்பு / பால் அவல் பஞ்சாமிர்தம் (அடுப்பில்லாமல்)

Photo of Milk Aval Panchamirtham by Sowmya Sundar at BetterButter
576
2
0.0(0)
0

பால் அவல் பஞ்சாமிர்தம் (அடுப்பில்லாமல்)

Mar-21-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் அவல் பஞ்சாமிர்தம் (அடுப்பில்லாமல்) செய்முறை பற்றி

அவலை பாலில் ஊற வைத்து பழங்கள் , தேன் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான அடுப்பில்லாத உணவு. சுலபமாக இதை செய்து காலை அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பழங்கள் பால் மற்றும் அவல் தேன் சேர்த்து இருப்பதால் மிகவும் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் -1 கப்
  2. காய்ச்சிய பால் -1 கப்
  3. ஆப்பிள்-1
  4. மாதுளைமுத்து -1/4 கப்
  5. திராட்சை-1/4 கப்
  6. வாழைப்பழம்-1
  7. பேரிச்சை-6
  8. முந்திரி-6
  9. கிஸ்மிஸ்-ஒரு கைப்பிடி
  10. தேன்-2 மேசை கரண்டி
  11. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீர் விட்டு களைந்து விட்டு காய்ச்சிய பாலில் கலந்து 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்
  2. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஊறிய அவலில் பழங்கள், தேன், முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் ஏலக்காய் பொடி அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்