மாப்பிள்ளை சம்பா இட்லி | Mapillai samba idli in Tamil

எழுதியவர் Poovarasi Vinayaka  |  1st Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mapillai samba idli by Poovarasi Vinayaka at BetterButter
மாப்பிள்ளை சம்பா இட்லிPoovarasi Vinayaka
 • ஆயத்த நேரம்

  16

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

4

0

மாப்பிள்ளை சம்பா இட்லி recipe

மாப்பிள்ளை சம்பா இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mapillai samba idli in Tamil )

 • மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப்
 • இட்லி அரிசி 1 கப்
 • உளுந்து 1 கப்
 • வெந்தயம் 1/2 ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு

மாப்பிள்ளை சம்பா இட்லி செய்வது எப்படி | How to make Mapillai samba idli in Tamil

 1. மாப்பிள்ளை சம்பா, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும்
 2. உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்
 3. மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்
 4. இப்போது அரிசி மற்றும் உளுந்து் மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்
 5. புளித்த பிறகு லேசாக கலந்து கொண்டு இட்லி தட்டில் மாவை ஊற்றி 10-15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
 6. சுவையான மாப்பிள்ளை சம்பா இட்லி தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் சுவைக்கலாம்

எனது டிப்:

புளித்த மாவை லேசாக கலக்க வேண்டும். நன்று கலந்தால் இட்லி மிருதுவாக வராது

Reviews for Mapillai samba idli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.