வீடு / சமையல் குறிப்பு / சாமை சாபுதானா இட்லி

Photo of Samai sabudana idly by Krishnasamy Vidya Valli at BetterButter
400
4
0.0(0)
0

சாமை சாபுதானா இட்லி

Apr-09-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமை சாபுதானா இட்லி செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை உணவு இது. ஒருவருக்கு இரண்டு வீதம் இரண்டுபேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜவ்வரிசி -1/8 கப்
  2. சாமை அரிசி -1/8 கப்
  3. தயிர் -1/4
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  6. வறுத்த வேர்கடலை -1 மேஜைக்கரண்டி
  7. தாளிக்க
  8. எண்ணெய் -1 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் -2 சிட்டிகை
  12. பச்ச மிளகாய் -1
  13. பச்ச பட்டாணி -1 மேஜைக்கரண்டி
  14. கேரட் துருவல் -1 தேக்கரண்டி
  15. வெங்காயம் நறுக்கியது - 1 தேக்கரண்டி
  16. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்
  2. சாமை அரிசியையும் வெறும் கடாயில் வறுக்கவும்
  3. இரண்டையும் ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. அதை உப்பு சேர்த்து தயிரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வதக்கவும்
  6. ஊறவைத்ததுடன் வதக்கியதையும் கொத்தமல்லி இலையையும் சேர்க்கவும்
  7. வறுத்த வேர்கடலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  8. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  9. சாம்பார்/சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்