Photo of Colour full Idiyappam by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
867
9
0.0(4)
0

Colour full Idiyappam

Apr-09-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Colour full Idiyappam செய்முறை பற்றி

கலர்புல் இடியாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு -4 கப்
  2. கேப்பை மாவு 1 கப்
  3. கோதுமை மாவு -1 கப்
  4. கேரட் -1
  5. பீட்ரூட் -1
  6. மல்லி & புதினா இலை - சிறிதளவு
  7. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதுக்க வைத்துக்கொள்ளவும்.
  2. கேரட் ,பீட்ரூட் ,மல்லி, புதினா இலைகளை தனித்தனியாக மிக்சியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  3. இப்பொழுது 1கப் மாவு எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சூடு தண்ணீர் விட்டு வெள்ளை இடியாப்பத்திற்கு மாவு பிசைந்து கொள்ளவும்.
  4. கேரட்,பீட்ரூட் ,மல்லி புதினா இடியாப்பத்திற்கு கேரட்,பீட்ரூட் ,மல்லி புதினா சாறினை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் சூடு தண்ணீர்ஊற்றி தனித்தனியாக மாவு பிசைந்து கொள்ளவும் .
  5. கேப்பை இடியாப்பத்திற்கு மாவுடன் உப்பு மற்றும் சூடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் .
  6. கோதுமை மாவு இடியாப்பத்திற்கு 1 கப் மாவினை நன்கு வறுத்து அதனுடன் உப்பு சூடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
  7. இப்பொழுது கலர்புல் இடியாப்பம் செய்ய மாவு தயார்.
  8. அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவு உருண்டைகளை இடியாப்ப குழலில் வைத்து இடியாப்பம் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். கோதுமை மற்றும் கேப்பை இடியாப்பம்.
  9. வெள்ளை இடியாப்பம்
  10. மல்லி புதினா இடியாப்பம்.
  11. பீட்ரூட் இடியாப்பம
  12. கேரட் இடியாப்பம்
  13. பிழிந்து இடியாப்பத்தை 7-10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  14. இப்பொழுது சுவையான கலர்புல் இடியாப்பம் தயார் .தேங்காய் பால்,சட்னி,சீனி,துருவிய தேங்காயுடன் பரிமாறவும் .

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-10-2018
Pushpa Taroor   Apr-10-2018

Good

Priya Mohan
Apr-10-2018
Priya Mohan   Apr-10-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்