வீடு / சமையல் குறிப்பு / சோள முட்டை ஆப்பம்

Photo of Sorghum(Jowar) Egg Appam by Menaga Sathia at BetterButter
388
2
0.0(0)
0

சோள முட்டை ஆப்பம்

Apr-10-2018
Menaga Sathia
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோள முட்டை ஆப்பம் செய்முறை பற்றி

இதில் முட்டை, ஆப்பமாவு இரண்டையும் கலந்து செய்துருக்கேன்.இல்லையெனில் ஒவ்வொரு ஆப்பத்திலும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மிளகுதூள் தூவி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம் -1 கப்
  2. வரகரிசி - 1 கப்
  3. வேகவைத்த வரகு சாதம் -1/4 கப்
  4. உப்பு - தேவைக்கு
  5. ஆப்பமாவில் கலக்க:
  6. கெட்டி தேங்காய்பால் -1/4 கப்
  7. சர்க்கரை -1/2 டீஸ்பூன்
  8. பேக்கிங்சோடா - 1/4 டீஸ்பூன்
  9. முட்டை ஆப்பத்திற்கு:
  10. முட்டை-2
  11. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  12. உப்பு -1 சிட்டிகை
  13. சோம்புதூள் -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோளம், வரகு இரண்டையும் ஒன்றாக குறைந்தது 6 மணிநேரம் ஊறவைக்கவும். சோளம் ஊற நேரமாகும்.
  2. ஊறியதும் உப்பு,வரகரிசி சாதத்துடன் மிக நைசாக அரைத்து புளிக்கவைக்கவும்
  3. மாவு புளித்ததும் தேவையான ஆப்பமாவில் தேங்காய்பால்,சர்க்கரை,பேக்கிங்சோடா கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
  4. வேறொரு பாத்திரத்தில் முட்டை,மஞ்சள்தூள், சோம்புதூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. இதனுடன் தேங்காய்பால் கலந்த ஆப்பமாவை சேர்த்து நன்கு கலக்கவும்
  6. ஆப்பசட்டியை காயவைத்து ஒருகுழிகரண்டி மாவை ஊற்றி ,ஆப்பசட்டியை லேசாக சுற்றவும்.பின் மீடிபோட்டு வேகவைக்கவும்.
  7. வெந்ததும் அதன்மீது சர்க்கரை தூவி தேங்காய்பாலுடன் பரிமாறலாம்.
  8. அல்லது சர்க்கரை சேர்க்காமல் இடியாப்ப குருமாவுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்