Photo of Falafel / Chickpea Balls by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
416
6
0.0(4)
0

Falafel / Chickpea Balls

Apr-18-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டக்கடலை - 1 கப்
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. பூண்டு -4 பல்
  4. பச்சை மிளகாய் - 1
  5. மல்லி இலை - சிறிதளவு
  6. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  7. சீரகம் தூள்- 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
  9. மல்லி தூள்-1/2 தேக்கரண்டி
  10. மிளகு தூள்-1/2 தேக்கரண்டி
  11. மைதா -2 தேக்கரண்டி
  12. எள் - சிறிதளவு
  13. உப்பு -தேவையான அளவு
  14. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கொண்டக்கடலை கழுவி 8-10 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. நன்கு ஊறிய பின்பு தண்ணீரை வடித்து அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,பூண்டு ,பெருஞ்சீரகம் ,மல்லி இலை,சீரகம் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அரைத்த விழுதுடன் 2 தேக்கரண்டி மைதா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  5. இப்பொழுது ஃபலாபெல் செய்ய மாவு தயார்.
  6. மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மேல் எள் இலேசாக தூவி வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்.
  8. இரண்டு பக்கமும் மிதமான தீயில் நன்கு வேகவைத்து கோல்டன் ப்ரவுன் கலராக வரும் வரை பொரித்து எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்.
  9. இப்பொழுது சுவையான மொருமொருப்பான ஃபலாபெல் / கொண்டக்கடலை பால்ஸ் தயார் .

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rahumath Nisha
Apr-22-2018
Rahumath Nisha   Apr-22-2018

Lalitha Venkat
Apr-18-2018
Lalitha Venkat   Apr-18-2018

Nutritious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்