பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி | aloo gobi punjabi dhaba style in Tamil

எழுதியவர் Shreya barve  |  18th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of aloo gobi punjabi dhaba style by Shreya barve at BetterButter
பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி Shreya barve
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1093

0

பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி recipe

பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி தேவையான பொருட்கள் ( Ingredients to make aloo gobi punjabi dhaba style in Tamil )

 • தேவையான அளவு உப்பு
 • 4-5 தேக்கரண்டி எண்ணெய் பொரிப்பதற்கு
 • 1.5 கப் தண்ணீர் - தேவைப்பட்டால் ஒரு ½ கப் அதிகமாக
 • ½ தேக்கரண்டி நசுக்கிய கஸ்தூரி வெந்தயக் கீரை
 • ½ தேக்கரண்டி பஞ்சாபி கரம் மசாலா தூள்
 • 1-2 காய்ந்த மிளகாய்
 • 1-2 மல்லி சீரகத் தூள்
 • ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 1 நடுத்தர அளவு தக்காளி நறுக்கியது
 • ½ சீரகம்
 • ½ தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 • 1-2 பச்சை மிளகாய் நசுக்கியது
 • 3-4 பூண்டு + ½ இன்ச் இஞ்சி - நசுக்கியது
 • 1 நடுத்தர அளவு வெங்காயம் நறுக்கியது
 • 1 நடுத்தர அளவிலான காலிபிளவர்/கோபி

பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி செய்வது எப்படி | How to make aloo gobi punjabi dhaba style in Tamil

 1. ஒரு காலிபிளவரை நடுத்தர அளவுப் பூக்களாக நறுக்கி அலசி எடுத்து வைக்கவும்.
 2. 3 கப் தண்ணீரை உப்போடு சூடுபடுத்தி கொதி வந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
 3. இப்போது பூக்களை வெந்நீரில் சேர்த்து முறுப்பான-மிருதுவான நிலைக்கு 5ல் இருந்து 6 நிமிடங்கள் வேகவைத்து காலிபிளவர் பூக்களை வடிக்கட்டி எடுத்துவைத்து மெதுவாகத் துடைத்து உலர்த்தவும்.
 4. இதற்கிடையில், வெங்காயத்தை நறுக்கி இஞ்சிப்பூண்டு மிளகாய், பெருஞ்சீரகத்தை குழவியில் அரைத்துககொள்ளவும்.
 5. தக்காளியை நறுக்கி எடுத்து வைக்கவும்.
 6. ஒரு கடாயில் அல்லது வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகத்தோடு பதப்படுத்தவும். வெடிக்க ஆரம்பித்ததும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
 7. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 5ல் இருந்து 7 நிமிடங்கள் வேகவைத்து மிருதுவாகும்வரை வதக்கவும்.
 8. இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய், பெருஞ்சீகரத்தைச் சேர்த்து நசுக்கி சில நொடிகள் வதக்கவும், இஞ்சிப்பூண்டின் பச்சை வாடை போகும்வரை.
 9. இப்போது காய்ந்த மிளகாயையும் அனைத்து மசாலாத் தூள்களையும் சேர்த்து (மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், பஞ்சாபி கரம் மசாலா) 1-2 நிமிடங்கள் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 10. அடுத்து நறுக்கியத் தக்காளிகளைச் சேர்த்து அவை மிருதுவாகும்வரையிலும் எண்ணெய் மசாலாவிலிருந்து பக்கவாட்டில் வெளிவரும்வரை வரையில் வதக்கவும்.
 11. அரைவேக்காட்டு காலிபிளவர் பூக்களோடு உப்பு கரம் மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 12. ஒரு கப்பில் பாதியளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் குறையும்வரை வேகவைக்கவும்.
 13. காலிபிளவர் மசாலாவை உயர் தீயில் 10-15 நிமிடங்கள் தோராயமாக முழுமையாக வேகும்வரையில் வேகவைக்கவும்.
 14. நசுக்கிய கஸ்தூரி வெந்தயம் சேர்த்து கலக்கி அடுப்பை நிறுத்தவும்.
 15. ரொட்டி, சாதாரண பரோட்டா, நான் அல்லது தந்தூரி ரொட்டியோடு பரிமாறுக.

Reviews for aloo gobi punjabi dhaba style in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.