காஷ்மீர் புலாவ் | Kashmiri Pulao in Tamil

எழுதியவர் Divya A  |  18th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kashmiri Pulao by Divya A at BetterButter
காஷ்மீர் புலாவ்Divya A
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

4496

0

காஷ்மீர் புலாவ் recipe

காஷ்மீர் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kashmiri Pulao in Tamil )

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • மிளகு - 1/4 தேக்கரண்டி
  • சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
  • ஏலக்காய் - 2
  • பிரிஞ்சி இலை - 1
  • கிராம்பு - 2
  • பிஸ்தா பருப்பு - 3ல் இருந்து 5 (நறுக்கியது)
  • பாதாம் பருப்பு - 3ல் இருந்து 5 (நறுக்கியது)
  • முந்திரி பருப்பு - 8
  • பாதாம் பருப்பு - 5ல் இருந்து 10 (நறுக்கியது)
  • சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
  • உலர் திராட்சை - 15ல் இருந்து 20 (உங்களுக்கு அந்தளவிற்கு பிடிக்கவில்லை என்றால் குறைத்துக்கொள்ளவும்)
  • சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  • புதினா இலை - கொஞ்சம் (8ல் இருந்து 10 இலைகள்)
  • இஞ்சி - 1/4இன்ச் நீளமுள்ள சிறிய துண்டு (நசுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1 (விருப்பம் சார்ந்தது)
  • பெரிய வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கியது)
  • பாஸ்மதி அரிசி - 75 கிராம்

காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி | How to make Kashmiri Pulao in Tamil

  1. பாஸ்மதி அரிசியை இரண்டு முறைக் கழுவி ஒரு கடாயில் சேர்த்து கிட்டத்தட்ட 3 அல்லது 4 மடங்களு அரிசியைச் சேர்க்கவும். அதன்பின்னர் கொஞ்சம் உப்பு ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் அரிசி சற்றே அரிசித்தன்மையோடு இருக்கும்படி வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
  2. தண்ணீரை வடிக்கட்டி சமைத்த அரிசியை எடுத்து வைக்கவும்.
  3. இப்போது ஒரு கடாயைத் தீயில் வைத்து எண்ணெய்யோடு நெய்யை ஊற்றவும். சூடானபின்னர் நறுக்கிய வெங்காயத்தையும் சர்க்கரையையும் சேர்க்கவும். ஒரு மிதமானச் சூட்டில் வெங்காயம் பொன்னிறமாகி கேரமலைஸ் ஆகும்வரை வதக்கவும். கடாயிலிருந்து வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு போன்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சிறு தீயில் சில விநாடிகள் வதக்கவும்.
  5. அதன்பின்னர் கொட்டைகள், நசு்ககிய இஞ்சி, பிளந்த பச்சை மிளகாய், உலர் திராட்சை சேர்த்து சிறு தீயில் பருப்புகள் மொறுமொறுப்பாகி சற்றே பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்போது கொஞ்சம் புதினா சேர்த்துக் கிளரவும்.
  6. சீரகத் தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  7. அதன்பின்னர் குங்குமப்பூத் தாள்களை (பயன்படுத்துவதற்கு முன் நன்றாகப் பொடிசெய்யப்பட்டது) சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
  8. அதன்பின்னர் வேகவைத்த அரிசியைச் சேர்த்து மெதுவாக வதக்கவும், அப்போதுதான் அரிசி உடையாது. கலவை அரிசியுடன் நன்காறக் கலக்கும்வரை கிளரவும்.
  9. இறுதியாக கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். (அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்)
  10. அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய புதினா அல்லது கேரமலைஸ் வெங்காயத்தோடு அலங்கரித்து கொஞ்சம் குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Kashmiri Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.