வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை உருண்டை

Photo of Peanut jaggery balls by Rabia Hamnah at BetterButter
201
3
0.0(0)
0

வேர்க்கடலை உருண்டை

Apr-21-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை உருண்டை செய்முறை பற்றி

இந்த காலத்தில் இப்படிபட்ட ஆரோக்கிய திண்பண்டங்களை கான்பது அறிதாகி விட்டது. நாம் வீட்டிலேயே சுத்தமான முறையில் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. வேர்க்கடலை-2 கப்
  2. வெல்லம்-1 1/4கப்
  3. தண்ணீர்-3/4 கப்
  4. நெய்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை முதலில் வருக்க வேண்டும். நன்கு மனம்வர வருக்கவும்.
  2. வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  3. வெல்லம் கரைந்ததும் வடிகட்டியில் வடிக்கவும்.
  4. பின்பு மறுபடி வெல்லத்தை பாத்திரத்தில் சேர்த்து வற்ற வைக்கவும்.
  5. வெல்லம் நன்கு சேர்ந்து வரும் பொழுது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு ஒரு சொட்டு வெல்லப்பாகை ஊற்றவும்.
  6. வெல்லம் தண்ணீரில் கலந்து விடாமல் தனியாக இருக்க வேண்டும். இதுவே பதம்.
  7. இந்த பதத்தில் வந்ததும் வேர்க்கடலையை சேர்த்து கிண்டி விடவும்.
  8. இரண்டு கைககளிலும் நெய் தடவி கொஞ்சம் சூட்டுடனே உருண்டை பிடிக்கவும்.
  9. இப்படி அனைத்தையும் செய்து ஆறியதும் டப்பிவில் போட்டு வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்