வீடு / சமையல் குறிப்பு / கிழங்கு ரவை பிங்கர்ஸ்

Photo of Aloo sooji crispy Fingers by Saivardhini Badrinarayanan at BetterButter
326
2
0.0(0)
0

கிழங்கு ரவை பிங்கர்ஸ்

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிழங்கு ரவை பிங்கர்ஸ் செய்முறை பற்றி

சுவையான மொறு மொறு பிங்கர்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. ரவை 1/2 கப்
  3. பச்சைமிளகாய் 2
  4. கொத்துமல்லி இலை 1/4 கப்
  5. தண்ணீர்
  6. எண்ணெய்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் தோல் நீக்கி நன்கு மசித்து பிசைந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் 3/4 கப் தண்ணீர், 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. பின் கொதி நிலை வந்தவுடன் ரவை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும். நன்கு ஆறவைக்கவும்.
  5. பின் மசித்த உருளைக்கிழங்குவுடன் ஆறிய ரவை , பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலைகள், பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்.
  6. பின் கையில் எண்ணெய் தடவி நீளவாக்கில் உருட்டி தட்டில் வைக்கவும்.
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்