வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு வாழைப்பழ கேக்

Photo of Wheat flour banana cake by Krishnasamy Vidya Valli at BetterButter
874
4
0.0(0)
0

கோதுமை மாவு வாழைப்பழ கேக்

Apr-27-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு வாழைப்பழ கேக் செய்முறை பற்றி

வாழைப்பழம் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த கேக் பிடிக்கும். செய்வது சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கோதுமை மாவு -2 கப்
  2. வாழைப்பழம் -2 பெரியது
  3. சீனி -3/4 கப் விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்
  4. எண்ணெய் -1/2 கப்
  5. தயிர் -1/4 கப்
  6. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
  8. வெனிலா எஸன்ஸ் -1 தேக்கரண்டி
  9. உப்பு -1 சிட்டிகை
  10. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ஃபரூட்டி /நட்ஸ்- 1/4 கப்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை தோல் உரித்து நறுக்கிக்கொள்ளவும்
  2. வாழைப்பழத்தை சீனி சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும்
  3. அதோடு கொடுக்கப்பட்ட பொருட்களை ஒவ்வென்றாக (சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ஃபரூட்டி /நட்ஸ் தவிர) சேர்த்து கட் அண்ட் போல்ட் முறையில் கலந்து கொள்ளவும்
  4. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ஃபரூட்டி /நட்ஸ் 1/8 கப் அளவை செய்த கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்யவும்.
  6. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து செய்த கலவையை ஸ்பிரட் செய்யவும்.
  7. அதன் மேலே மீதமுள்ள சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ஃபரூட்டி /நட்ஸ் -ஐ தூவவும்
  8. 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  9. டூத்பிக் உதவியுடன் நடுவில் குத்தி ஒட்டாமல் வருகிறதா என பார்க்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக 15 நிமிடங்கள் வரை பேக் செய்யலாம்.
  10. ஆறியபின் கட் செய்து பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்