Photo of Okkarai by Krishnasamy Vidya Valli at BetterButter
163
3
0.0(0)
0

ஒக்காரை

Apr-27-2018
Krishnasamy Vidya Valli
125 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஒக்காரை செய்முறை பற்றி

தீபாவளியின் மிக முக்கியமான இனிப்பு வெரைட்டி. திருநெல்வேலியில் மிகவும் பிரபலம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு - 3/4 கப்
  2. வெல்லம் -3/4 கப் (விருப்பப்பட்டால் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்)
  3. நெய் -1/8 கப் முதல் 1/4 கப்
  4. ஏலப்பொடி -1/2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு/தேங்காய் பல்லு கீறியது -1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. குறைவான அளவில் செய்பவர்கள் நேரடியாக நெய்யில் வதக்கிக்கொள்ளவும். ஆனால் இதற்கு அதிகமாக நெய் தேவைப்படும்.
  4. அதிகமாக அளவில் செய்பவர்கள் இட்லி தட்டில் நெய் தடவி அரைத்த விழுதை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து ஆறவைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
  5. கடாயில் நெய் விட்டு முந்திரி/தேங்காய் பல்லுகீறியதை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
  6. உதிர்த்ததை சேர்த்து நன்றாக கிளறவும். உதிர்உதிராக வரும் வரை கிளறவும்.
  7. மற்றொரு கடாயில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  9. கெட்டி பாகு பதம் வந்ததும் ஏற்கனவே கிளறி வைத்ததை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  10. ஏலப்பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெல்லப்பாகு முழுவதுமாக பருப்புடன் கலந்து உதிர்உதிரான பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்