வீடு / சமையல் குறிப்பு / மாதுளை கேசரி

Photo of Pomegranate kesari by Shaima Fathima at BetterButter
203
4
0.0(0)
0

மாதுளை கேசரி

Apr-30-2018
Shaima Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாதுளை கேசரி செய்முறை பற்றி

ஆரோக்கியமான , மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த இனிப்பு வகையை அனைவரும் செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஃப்ரஷ் மாதுளை ஜூஸ் - 1.1/2 கப்
  2. பால்ரவை(semolina)- 1 கப்
  3. சர்க்கரை - 3/4 கப்
  4. நெய் - 1/2 கப்
  5. அண்டி,கிஸ்மஸ் - 1/2கப்

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  2. மாதுளை ஜூஸ் எடுத்துவைக்கவும்.
  3. அடுப்பில் வாணலிவைத்து மாதுளை ஜுஸ் ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. கொதித்து வரும்போது வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
  5. அது இறுகி வரும்போது 1 டீஸ்பூன் நெய்சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  6. பின்னர் இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மீதம் இருக்கும் நெய்யை விட்டு அதில் அண்டி கிஸ்மஸ் (உலர்ந்த முந்திரி)போட்டு வறுத்து அப்படியே  கேசரியில் விட்டு கிளறி அதை ஒருதட்டில் வைத்து ஆறியபின் துண்டு போட்டு எடுத்துக்கொள்ளவும். சுவையான மாதுளை கேசரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்