வீடு / சமையல் குறிப்பு / பூரணம் வைத்த இட்லி

Photo of Stuffed idli by Ruchiajay Mahant at BetterButter
360
29
4.8(0)
0

பூரணம் வைத்த இட்லி

Apr-30-2016
Ruchiajay Mahant
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஸ்டிர் ஃபிரை
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. மாவுக்கு:
 2. 1 கப் உளுந்து, தோலில்லாதது
 3. 2 கப் ரவை
 4. 1.5 கப் தண்ணீர்.
 5. உப்பு 1 தேக்கரண்டி
 6. பூரணத்திற்கு:
 7. 4 வேகவைத்த உருளைக்கிழங்கு
 8. 1 நறுக்கப்பட்ட வெங்காயம்
 9. 1 நறுக்கப்பட்ட தக்காளி
 10. 5-6 கறிவேப்பிலை
 11. 1 தேக்கரண்டி சீரகம்
 12. மஞ்சள் தூள்
 13. எண்ணெய். + இட்லி தட்டில் தடவுவதற்குக் கொஞ்சம்
 14. சுவைக்கேற்ற உப்பு
 15. கருமிளகு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. மாவுக்காக:
 2. பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 3. அதன்பின் ரவையைச் சேர்த்து உப்பு, பருப்புடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 4. பூரணத்திற்கு:
 5. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். அவற்றோடு சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்க்கவும். அவற்றை 2 நிமிடங்கள் வதக்கவும். அதன்பின் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகு, இறுதியாக மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
 6. 1-2 நிமிடங்கள் வேகட்டும். அடுப்பை நிறுத்தி விட்டு எடுத்து வைக்கவும்.
 7. மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சரியான பதத்திற்கு இட்லி மாவைத் தயாரித்துக்கொள்ளவும்.
 8. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அதன் பிறகு பூரணத்தை வைத்து மீண்டும் மாவை அதன் மீது ஊற்றவும். 13-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 9. சூடாகப் பரிமாறி உண்டு மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்