வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் நக்கெட்ஸ்

Photo of Chicken Nuggets by விருதை சமையல் at BetterButter
225
3
0.0(0)
0

சிக்கன் நக்கெட்ஸ்

May-14-2018
விருதை சமையல்
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் நக்கெட்ஸ் செய்முறை பற்றி

சிக்கன் நக்கெட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் - 150 கிராம்
  2. சோள மாவு - 3 தேக்கரண்டி
  3. மைதா மாவு - 2 தேக்கரண்டி
  4. பால் -1/4 கப்
  5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. ரஸ்க் தூள் - 5 தேக்கரண்டி
  9. கார்ன் பிளேக்ஸ் தூள் - 3 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு 
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு செவ்வக வடிவங்களாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அதனுடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொள்ளவும்.
  4. மற்றொரு கிண்ணத்தில் கார்ன் பிளேக்ஸ் தூள் மற்றும் ரஸ்க் தூள் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக மைதா மாவு கலவையில் பிரட்டி பாலில் டிப் செய்து உடனே ரஸ்க் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான மொறு மொறு சிக்கன் நக்கெட்ஸ் தயார்.
  8. இதை Tomato Sauce உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்