வீடு / சமையல் குறிப்பு / பீப் / மட்டன் ஸ்டீக்

Photo of Beef / Mutton steak by Asiya Omar at BetterButter
697
2
0.0(0)
0

பீப் / மட்டன் ஸ்டீக்

May-20-2018
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீப் / மட்டன் ஸ்டீக் செய்முறை பற்றி

அசைவ பிரியர்கள் ,பேலிபோ டயட் இருப்பவர்கள் இந்த ஸ்டீக் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்,முழு நேர உணவாகவோ பக்க உணவாகவோ சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • கிரில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய அளவு எலும்புடன் அல்லது எலும்பில்லாத இறைச்சி -1 கிலோ
  2. ஆலிவ் ஆயில் -2 மேஜைக்கரண்டி
  3. தட்டிய பூண்டு -10 பற்கள்
  4. எலுமிச்சைப் பழ ஜூஸ் -1
  5. மிளகுப் பொடி - 2 தேக்கரண்டி
  6. சோயா சாஸ் -1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவைக்கு.
  8. நறுக்கிய பார்ஸ்லி அல்லது கொத்தமல்லி இலை.

வழிமுறைகள்

  1. மட்டன் அல்லது பீப் துண்டுகள் நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. அதனுடன் எலுமிச்சை ஜூஸ்,தட்டிய பூண்டு,மிளகு,உப்பு சேர்த்து விரவி குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.
  3. சூடான ஒரு கிரில் பேனில் எண்ணெய் சேர்த்து அதனில் ஊறிய இறைச்சி துண்டுகளை வைக்கவும்.மூடி வேக விடவும்.
  4. தண்ணீர் ஊறி வரும்.
  5. மூடி தண்ணீர் வற்றி வரும் வரை சிம்மில் வைத்து வேக விடவும்.சோயா சாஸ் சேர்க்கவும்.
  6. திருப்பி விட்டு நன்கு வேக விடவும்.இரு புறமும் முறுக விடவும்.நறுக்கிய பார்ஸ்லி இலை சேர்க்கவும்.
  7. பிரட்டி விடவும்.
  8. தட்டில் எடுத்துப் பரிமாறவும்.
  9. பக்க உணவாக சூப் ரொட்டியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்