வீடு / வீடியோக்கள் / மணத்தக்காளி கீரை பருப்பு

1697
3
0.0(0)
0

மணத்தக்காளி கீரை பருப்பு

Jan-29-2018
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி கீரை பருப்பு செய்முறை பற்றி

ஆரோக்கியமான மணத்தக்காளி பாசிப்பருப்பு பொரியல் மண்சட்டியில் செய்து பரிமாறியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மணத்தக்காளி கீரை -1 கட்டு
  2. பாசிப்பருப்பு -50 கிராம்( பருப்பு வேக கால் தேக்கரண்டி மஞ்சள்,சீரகம் தூள்)
  3. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  4. சீரகம் -1/2 தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  6. கிள்ளிய மிளகாய் வற்றல்-3
  7. நறுக்கிய வெங்காயம் -1
  8. நறுக்கிய பூண்டு -5 பற்கள்
  9. தேங்காய் த்துருவல் -4 மேஜைக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கு.
  11. நெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  2. மணத்தக்காளி ஆய்ந்து கழுவி நறுக்கவும்,பாசிப்பருப்பு ஊற வைக்கவும்.வெங்காயம் பூண்டு நறுக்கவும்.
  3. சட்டியில் எண்ணெய் சூடு செய்யவும்.
  4. பருப்பு வேக தண்ணீர்,மஞ்சள்,சீரகத்தூள் சேர்க்கவும்.
  5. எண்ணெய் சூடானவுடன்,சீரகம்,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
  6. வெங்காயம் சேர்த்து வதக்கி,பூண்டும் சேர்த்து வதக்கவும்.
  7. கீரை சேர்க்கவும்.
  8. பருப்பு கொதித்து வெந்து வருகிறது.
  9. நறுக்கிய கீரை சேர்த்து வதக்கவும்.
  10. பிரட்டி விடவும்,கீரையில் தண்ணீர் ஊறும்.
  11. உப்பு சுவைக்குச் சேர்க்கவும்.
  12. பருப்பு தண்ணீர் வற்றி வெந்து வருகிறது.
  13. முக்கால் வேக்காடு வெந்த பருப்பு சேர்க்கவும்.
  14. கலந்து விட்டு மூடி போட்டு சிறிது ஒன்று சேரும் படி வேக விடவும்.
  15. 2 நிமிடம் கழித்து திறக்கவும்.
  16. திறந்து தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
  17. பிரட்டி விடவும்.
  18. 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  19. சுவையான மணத்தக்காளி பாசிப்பருப்பு பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்