Home / Recipes / Coconut milk chicken curry

Photo of Coconut milk chicken curry by Asiya Omar at BetterButter
263
5
0.0(0)
0

Coconut milk chicken curry

Oct-03-2017
Asiya Omar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut milk chicken curry RECIPE

சிக்கன் கறியை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் பொழுது அதன் மணமும் ருசியும் தனி தான்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சிக்கன் ஊற வைக்க:-
  2. சிக்கன் - அரைக்கிலோ
  3. இஞ்சிபூண்டு விழுது -1 டீஸ்பூன்
  4. தயிர்-1 டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
  7. உப்பு-தேவைக்கு
  8. மற்ற பொருட்கள் தேவையானவை:-
  9. வெங்காயம் நறுக்கியது -2
  10. தக்காளி - 2
  11. பச்சை மிளகாய் -2
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1டீஸ் பூன்
  13. கரம் மசாலா -கால் அல்லது அரைடீஸ்பூன்
  14. மிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
  15. சீரகத்தூள்-அரைடீஸ்பூன்
  16. கெட்டி தேங்காய்ப்பால் -1 கப்
  17. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  18. நறுக்கிய மல்லி,புதினா சிறிது
  19. உப்பு- தேவைக்கு.

Instructions

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. சிக்கனை மேலே ஊற வைக்கச் சொன்ன பொருட்கள் கொண்டு ஊற வைக்கவும்.
  3. குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. அத்துடன் நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்க விடவும்.
  5. மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டி ஊறிய சிக்கன் சேர்க்கவும்.
  6. ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் குக்கர் என்றால் வைத்து அணைக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும்.
  8. கொதிவந்தவுடன் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
  9. அடுப்பை அணைக்கவும்.சுவையான தேங்காய்ப்பால் சிக்கன் கறி தயார்.
  10. நெய்ச்சோறு,புலாவ் வகைகளுடனும் டிபனுக்கும் பரிமாற ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE