Home / Recipes / Thakkadi

Photo of Thakkadi by Vins Raj at BetterButter
860
3
0.0(0)
0

Thakkadi

Oct-11-2017
Vins Raj
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Medium
  • Christmas
  • South Indian
  • Boiling
  • Breakfast and Brunch

Ingredients Serving: 4

  1. 250 கிராம் மட்டன்
  2. 1 கப் அரிசி மாவு
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 1/2 கப் அரைத்த தேங்காய் விழுது
  5. 1/2 கப் தேங்காய் பால்
  6. 3 மே.க. இஞ்சி பூண்டு விழுது
  7. 1.5 தே.க. மஞ்சள் தூள்
  8. 1/2 தே.க. மிளகாய் தூள்
  9. 1/2 தே.க.மிளகு தூள்
  10. 2 தே.க.கொத்தமல்லி தூள்
  11. 2 வெங்காயம்
  12. 1 தக்காளி
  13. 3 மே.க. தேங்காய் எண்ணெய்
  14. 2 பட்டை 1"அளவுக்கு
  15. 4 லவங்கம்
  16. 1 அன்னாசி மொக்கு
  17. 4 ஏலக்காய்
  18. 1 தே.க.சோம்பு
  19. 1 கைப்பிடி புதினா தழை
  20. 2 கொத்து கொத்தமல்லி தழை

Instructions

  1. முதலில் மட்டனை கழுவி ஒரு பிரஷர் குக்கரில் 1.5 கப் தண்ணீர் விட்டு அதனுடன் 1/2 தே.க. மஞ்சள பொடி, 1 தே.க . இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
  2. 1 பட்டை, 2 லவங்கம், 2 ஏலக்காய், சோம்பு ஒன்றாக தண்ணீரில்லாமல் பொடி செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
  3. தக்காளியை அரைத்து வைத்துக்கொள்ளவும்
  4. அடுத்தது அரிசி மாவை வறுக்க வேண்டும். ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். நிறம் மாற கூடாது
  5. வறுபட்ட அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பொடியாய் நறுக்கிய ஒரு வெங்காயம், 1 தே.க. இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு கிளறவும்.
  6. கிளறிய மாவை சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  7. ஒரு உருடையை மட்டும் தனியே எடுத்து 1/3 கப் தண்ணீர் விட்டு கலந்து தனியே வைத்துக்கொள்ளவும்.
  8. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், லவங்கம், அன்னாசி மொக்கு சேர்த்து, பின்னர் நீளவாக்கில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  9. பின்னர் மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  10. இப்பொழுது புதினா தழையை சேர்க்கவும்.
  11. பின்னர் பொடி செய்த பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.
  12. இப்போது தக்காளி விழுதை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள்,மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வெங்காயத்துடன் 2 நிமிடம் வதக்கவும்
  13. இப்பொது கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு அதனுடன் வேகவைத்த மட்டன் மற்றும் வேகவைத்த தண்ணீர் விடவும்.
  14. கொதி வந்தவுடன், உப்பை சரி பார்த்து தேங்காய் விழுதை விட்டு திரியாமல் இருக்க உடனே கலக்கி விடவும் .
  15. ஒரு 1 நிமிடம் கழித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக உள்ளே போடவும்.
  16. 4 நிமிடத்துக்கு கிளறக்கூடாது. பின்பு பிரட்டி விட்டு வேகவிடவும்.
  17. உருண்டைகள் வெந்தவுடன் மேலே எழும்பி வரும், இதற்க்கு 15 நிமிடங்கள் வரை ஆகும்.
  18. கடைசியில் ஒரு உருண்டையை தண்ணீர் விட்டு கலந்ததை இந்த குழம்பில் விட்டு 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும், இப்போது குழம்பு கட்டியாகிவிடும்
  19. கடைசியில் கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE