Home / Recipes / Chickpea in Almond Gravy

Photo of Chickpea in Almond Gravy by Sowmya Sundar at BetterButter
157
2
0.0(0)
0

Chickpea in Almond Gravy

Dec-12-2017
Sowmya Sundar
720 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Pressure Cook
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. வெள்ளை கொண்டைகடலை - 1 கப்
  2. பாதாம் பருப்பு- 12
  3. கசகசா- 2 டீஸ்பூன்
  4. வெங்காயம் - 2
  5. தக்காளி- 2
  6. பச்சை மிளகாய்-1
  7. இஞ்சி- 1 துண்டு
  8. பூண்டு- 4 பல்
  9. உப்பு
  10. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  11. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  12. மல்லி தூள்- 1 டீஸ்பூன்
  13. கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
  14. கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்
  15. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  16. சீரகம்- 1 டீஸ்பூன்
  17. பிரிஞ்சி இலை - 1
  18. மல்லி இலை சிறிது

Instructions

  1. கொண்டைகடலையை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி 10-12 மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும். கசகசாவை சிறிது தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு குக்கரில் ஊற வைத்த கொண்டைகடலையை தண்ணீர் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு நன்றாக வேக விடவும்.
  3. பாதாம் பருப்பு மற்றும் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  5. ஆறியதும் இந்த கலவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  6. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பிரிஞ்சி தாளித்து அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் அரைத்த பாதாம் கசகசா விழுதை சேர்த்து சுமார் 5 நிமிடம் வரை வதக்கி பின் வேக வைத்த கடலையை தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  8. அடுப்பை அணைக்கும் முன் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கவும் .
  9. சுவையான கொண்டைகடலை பாதாம் கிரேவி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE