Home / Recipes / Prawn kofta curry

Photo of Prawn kofta curry by Yasmin Shabira at BetterButter
487
8
0.0(0)
0

Prawn kofta curry

Dec-21-2017
Yasmin Shabira
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn kofta curry RECIPE

சாதம், சப்பாத்தி, இடியாப்பத்திற்கு ஏற்ற இறால் கோஃப்தா கறி

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. இறால் : 2கப்
  2. தேங்காய் : 1/2 கப் + 1 கப்
  3. பொட்டு கடலை : 2 மேசை கரண்டி
  4. வெங்காயம் : 3
  5. தக்காளி : 1
  6. பச்சை மிளகாய் : 3
  7. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  8. மிளகாய் தூள் : 2 மேசைக்கரண்டி
  9. ஜீரக தூள் : 2 தேக்கரண்டி
  10. மல்லி தூள் : 2 தேக்கரண்டி
  11. எண்ணெய் : 4 மேசைக்கரண்டி
  12. உப்பு : ருசிக்கேற்ப

Instructions

  1. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நன்றாக சுத்தம் செய்த இறாலை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்...
  2. அதில் சிறிது உப்பு மற்றும் 1 மேசைக்கரண்டி அளவு மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்...
  3. 5 நிமிடம் வெந்ததும் ஆற வைக்கவும்...
  4. மிக்ஸி ஜாரில் வேக வைத்த இறால், 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி ஜீரக தூள் , 1 பச்சை மிளகாய், 1 வெங்காயம், பொட்டு கடலை மற்றும் 1/2 கப் தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்....
  5. மீதமுள்ள ஒரு கப் தேங்காயை பேஸ்ட்டாக அரைத்து வைத்து கொள்ளவும்...
  6. கடாயில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு சூடானதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
  7. வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
  8. 2-3 நிமிடங்கள் கழித்து பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும்...
  9. பின்னர் மீதமுள்ள மிளகாய் தூள், ஜீரக தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்...
  10. ஒரு கப் தேங்காயை சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து சேர்க்கவும்...
  11. க்ரேவி நன்றாக கலந்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த இறாலை கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து க்ரேவியில் போடவும்...
  12. எல்லா உருண்டை களையும் சேர்த்தபின் மூடி சிம்மில் 5-6 நிமிடங்கள் வைக்கவும்...
  13. 5 நிமிடம் கழித்து கரண்டியால் உருண்டைகள் உடைந்து விடாமல் மெதுவாக திருப்பி போடவும்...
  14. 2-3 நிமிடம் சிம்மில் வெந்ததும் இறக்கவும்...
  15. சுவையான எளிதில் செய்ய கூடிய இறால் கோஃப்தா கறி தயார்!!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE