Home / Recipes / Dried fish brinjal curry

Photo of Dried fish brinjal curry by Asiya Omar at BetterButter
315
5
0.0(0)
0

Dried fish brinjal curry

Dec-27-2017
Asiya Omar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. கருவாடு -100 கிராம்
  2. கத்திரிக்காய் - கால் கிலோ
  3. உரிக்க ஒரு முழ நடுத்தர அளவு நாட்டுப் பூண்டு
  4. சின்ன வெங்காயம் உரித்தது - ஒரு கையளவு.
  5. கீறிய பச்சை மிளகாய் -1
  6. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  7. விரும்பினால் தக்காளி -1
  8. உப்பு - தேவைப்பட்டால் சிறிது.
  9. மசாலா தேவைக்கு:-
  10. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  12. மஞ்சள்,மிளகு,சீரகத் தூள் - தலா அரை தேக்கரண்டி.
  13. அரைக்க தேங்காய் -3 மேஜைக்கரண்டி.
  14. தாளிக்க:-
  15. நல்ல எண்ணெய் -3 -4 மேஜைக்கரண்டி
  16. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா அரை தேக்கரண்டி
  17. வெந்தயம் - கால் தேக்கரண்டி
  18. கருவேப்பிலை -2 இணுக்கு.

Instructions

  1. கருவாட்டுக் குழம்பை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகச் செய்வேன்.சுவையான குறிப்பு இதோ.
  2. சின்ன வெங்காயம்,முழுதாக போடும் பூண்டு பற்கள் குழம்பில் எடுத்துச் சாப்பிட அருமையாய் இருக்கும்.
  3. தாளிக்க ஒரு மண் சட்டியில் எண்ணெய் சூடாக்கி கடுகு,வெந்தயம்,உ.பருப்பு பொரிய விடவும்.கருவேப்பிலை சேர்க்கவும்.
  4. சின்ன வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.
  5. அத்துடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கி மூடி வேக விடவும்.
  6. கத்திரிக்காய் வெந்ததும் மசாலா பொருட்கள் சேர்த்து பிரட்டவும். இரு கப்பில் கரைத்த புளித்தண்ணீர் விடவும்.
  7. நன்கு கொதித்து புளி மசாலா வாடை மடங்க வேண்டும்.கருவாட்டைச் சேர்க்கவும்.உப்பு இருப்பதால்,உப்பை பார்த்து சேர்க்கவும்.
  8. எல்லாம் சேர்ந்து கொதிக்கட்டும்.தேங்காய் அரவை விரும்பினால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  9. அடுப்பைச் சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும்.
  10. சுவையான கருவாடு கத்திரிக்காய்க் குழம்பு தயார். சூடான சோறு,அவித்த முட்டை,பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE