Home / Recipes / Gobi Stem Chutney

Photo of Gobi Stem Chutney by Ayesha Ziana at BetterButter
551
4
0.0(0)
0

Gobi Stem Chutney

Dec-28-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gobi Stem Chutney RECIPE

காலி பிளவர் தண்டுகளை வைத்து செய்த துவையல். சாதத்திற்கு பரிமாற ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Blending
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. காலி பிளவர் தண்டு 1 சிறிய பவுல் அளவு
  2. காய்ந்த மிளகாய் 4
  3. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  4. புளி விரல் அளவு
  5. உப்பு தேவைக்கு
  6. எண்ணெய் தேவைக்கு
  7. தண்ணீர் சிறிதளவு
  8. தாளிக்க: கடுகு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை 1 கொத்து
  10. பெருங்காயம் சிறிது

Instructions

  1. கோபி தண்டுகளை(இலைகளும் சிறிது சேர்த்திருக்கிறேன்) முதலில் சுத்தப்படுத்தவும். பின்னர் நன்றாக கொதித்த தண்ணீரில் அவற்றை போட்டு மூடி 2 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் வடிகட்டி கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர், தண்டுகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அதன் பின் புளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  5. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, மிக்ஸியில் வறுத்து எடுத்த கலவை, உப்பு, மற்றும் மிக குறைவாக தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைக்கவும். இதை ஒரு பவுலில் கொட்டவும்.
  6. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து அதையும் பவுலில் கொட்டி கிளறி, பரிமாறவும்.
  7. சுவையான கோபி தண்டு துவையல் தயார். இதை சாதம், தோசை, ஆப்பம் போன்றவற்றிற்கு பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE