Home / Recipes / Aatukkaal salna

Photo of Aatukkaal salna by Asiya Omar at BetterButter
408
3
0.0(0)
0

Aatukkaal salna

Jan-02-2018
Asiya Omar
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. ரெடியாக வாங்கி கட் செய்த ஆட்டுக்கால் - 8 எண்ணம்
  2. வெங்காயம் -2
  3. தக்காளி -2
  4. பச்சை மிளகாய் -2
  5. மல்லி, கறிவேப்பிலை - சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா -1/4 -1/2 தேக்கரண்டி
  8. (வீட்டு குழம்பு )கறிமசாலாத்தூள் -2 மேஜைக்கரண்டி
  9. அல்லது மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி,சீரகத்தூள் 1 தேக்கரண்டி,மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி.
  10. மிளகுத்தூள் -1 தேக்கரண்டி
  11. நல்ல எண்ணெய் - 1-2 மேஜைக்கரண்டி
  12. தாளிக்க நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
  13. உப்பு - சுவைக்கு
  14. அரைக்க:-
  15. கால் கப் தேங்காய்த்துருவல்
  16. முந்திரி பருப்பு -4

Instructions

  1. முதலில் சுத்தம் செய்து ,சுட்டு துண்டு போட்டு வாங்கிய ஆட்டுக்காலை நன்கு அலசி நீர் வடிகட்டி கால் கப் மைதா போட்டு பிரட்டி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அலசி எடுக்கவும்.
  2. ப்ரெசர் குக்கரில் சுத்தம் செய்தஆட்டுக் கால், இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள்,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,தயிர் தேவைக்கு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் மூடி வெயிட் போடவும்.
  3. முதல் விசில் வந்ததும் அடுப்பைக் குறைத்து 30 நிமிடம் வைத்து அணைக்கவும்.
  4. ஆவியடங்கியவுடன் திறந்து உப்பு சேர்க்கவும்,கரம் மசாலா ,மிளகுத்தூள் சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
  5. தேங்காய் அரைத்தது சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும், அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  6. இனி தாளித்து கொட்ட வேண்டும்.
  7. ஒரு கடாயில் நல்ல எண்ணெய் விடவும்,சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.கறிவேப்பிலை சேர்க்கவும்.பொன்னிறமானதும் கொதித்துக் கொண்டிருக்கும் சால்னாவில் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  8. ஆட்டுக்கால் சால்னா தயார்.சூடாகப் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE