Home / Recipes / Cauliflower Rice Methi Pulao

Photo of Cauliflower Rice Methi Pulao by Sowmya Sundar at BetterButter
225
4
0.0(0)
0

Cauliflower Rice Methi Pulao

Feb-17-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower Rice Methi Pulao RECIPE

புலாவ் வகைகள் நாம் அரிசியில் செய்வோம்.இந்த புலாவ் அரிசி இல்லாமல் காலிஃப்ளவர் ரைஸ் உபயோகப்படுத்தி க்ளூட்டன் ஃப்ரீ லோ கார்போஹைட்ரேட் ஆக செய்துள்ளேன் .டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவையான ,முழுவதும் காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு இது .டயட் இல்லாத மற்றவர்கள் மற்றும் குழந்தைகள் இதை சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக அல்லது ப்ரெட் சாண்ட்விச்சினுள் வைத்து சாப்பிடலாம். டூ இன் ஒன் மெயின் மற்றும் சைட் டிஷ் இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • British
  • Sauteeing
  • Main Dish
  • Gluten Free

Ingredients Serving: 3

  1. காலிஃப்ளவர் -1
  2. பச்சை பட்டாணி -1/2 கப்
  3. வெந்தயக்கீரை -1கட்டு
  4. வெங்காயம்-1
  5. தக்காளி-1
  6. பூண்டு-3 பல்
  7. எண்ணெய் -2 டீஸ்பூன்
  8. பட்டை -1 துண்டு
  9. கிராம்பு -2
  10. ஏலக்காய்-2
  11. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  12. பொடி வகைகள்
  13. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  14. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  15. மல்லி தூள்-1 டீஸ்பூன்
  16. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  17. உப்பு

Instructions

  1. காலிஃப்ளவர் பூக்களை மட்டும் எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கழித்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  2. பின்னர் அதை ஒரு துருவியில் துருவி கொள்ளவும் /அல்லது ப்லென்டரில் திருப்பி கொள்ளவும்.காலிஃப்ளவர் ரைஸ் ரெடி.வெங்காயம் மற்றும் வெந்தயக் கீரையை நறுக்கி கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து கொட்டி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் அதனுடன் தக்காளி ,பச்சை பட்டாணி ,வெந்தயகீரை சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் துருவிய காலிஃப்ளவரை சேர்த்து மிதமான தீயில் சாப்டாக ஆகும் வரை வதக்கவும்
  6. அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE