Home / Recipes / Baby potato curd masal

Photo of Baby potato curd masal by Priyadharshini Selvam at BetterButter
219
4
0.0(0)
0

Baby potato curd masal

Feb-22-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baby potato curd masal RECIPE

பூரி சப்பாத்திக்கு எப்போதும் செய்யும் மஞ்சள் நிற மசாலா விடுத்து இந்த மாறி மசால் செய்து பாருங்கள். தயிரும் காரமும் கலந்த சுவை வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சின்ன உருளை - 1/4 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. மல்லி தூள் 1 தேக்கரண்டி
  8. சீரக தூள் 1/2 தேக்கரண்டி
  9. தயிர் 1 கப்
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. தண்ணீர் 2 மேஜைக்கரண்டி
  14. கொத்துமல்லி இலை சிறிதளவு

Instructions

  1. சின்ன உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயை விட்டு சூடானதும் சீரகம் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  4. லேசாக மசித்து விட்டு மசாலா தூள்கள் சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
  5. ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதை கடாயில் சேர்த்து கலக்கி கொண்டே இருக்கவும்.
  6. உப்பு , தேவையான தண்ணீர் சேர்த்து மூடு வெய்த்த 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. இப்போது நன்கு வேக வைத்த உருளை கிழங்கை சேர்க்கவும். நான்கு ஐந்து உருளைகளை மசித்து விடவும்.
  8. மூடி வைத்து 10 நிமிடம் சமைத்து எடுக்கவும். தண்ணீர் பதம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.
  9. கொத்துமல்லி இலை சேர்த்து இரக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE