Home / Recipes / Dindigul Mutton Dham Briyani

Photo of Dindigul Mutton Dham Briyani by Bena Aafra at BetterButter
347
3
0.0(0)
0

Dindigul Mutton Dham Briyani

May-14-2018
Bena Aafra
2100 minutes
Prep Time
90 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மட்டன் கறி -1கிலோ
  2. சீரக சம்பா அரிசி -1கிலோ
  3. நெய் -50கிராம்
  4. சின்ன வெங்காயம் -400கிராம்
  5. பூண்டு -200கிராம்
  6. இஞ்சி -100கிராம்
  7. பெரிய வெங்காயம் -1
  8. தக்காளி -4
  9. தயிர் -1கப்
  10. பச்சை மிளகாய் -4
  11. புதினா
  12. கொத்தமல்லி இழை
  13. பட்டை -1
  14. ஏலக்காய் -2
  15. கிராம்பு -2
  16. மிளகாய் தூள் -தேவையான அளவு
  17. உப்பு -தேவையான அளவு
  18. எண்ணெய் -1/4லிட்டர்
  19. பட்டை ஏலக்காய் தூள் -3ஸ்பூன்
  20. எலுமிச்சை பழம் -1

Instructions

  1. முதலில் மட்டன் கறி -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. பெரிய வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய் கீறி கொள்ளவும்.
  3. சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு அரைத்து விழுதாக வைத்து கொள்ளவும்.
  4. அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ,ஏலக்காய், கிராம்பு போட்டு தாழிக்கவும் .
  5. பின் புதினா, கொத்தமல்லி இழை, பச்சை மிளகாய், சேர்க்கவும்
  6. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக கலர் வந்ததும்,அரைத்து வைத்திருந்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு, விழுது சேர்க்கவும்.
  7. நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பட்டை ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும்.
  8. நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. பின் உப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு தயிர் சேர்த்து கிளறி விடவும்.
  10. இப்பொழுது மட்டன் கறி -ஐ சேர்த்து நன்றாக கிளறவும். கறி நிறம் மாறி தண்ணீர் வரும் பிரியும் வரை கிளறவும்.
  11. பின் கறியை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும்.
  12. கறி வெந்ததும் அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீர் அளந்து ஊற்றவும்.
  13. பின் தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  14. உப்பு பார்த்து போட்டு கொள்ளவும்.
  15. மிதமான சூட்டிலேயே வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
  16. அரிசி வெந்ததும் நெய் சேர்த்து கிளறி விடவும்.
  17. பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு தம்மில் போடவும்.
  18. 10நிமிடம் கழித்து சாப்பாட்டை ஒரு கிளறுகிளறி விட்டு இறக்கவும்.
  19. சுவையான திண்டுக்கல் தம் பிரியாணி தயார். ........

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE