Home / Recipes / Egg biryani

Photo of Egg biryani by Priyadharshini Selvam at BetterButter
1418
3
0.0(0)
0

Egg biryani

May-21-2018
Priyadharshini Selvam
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி – 2 கப்     
  2. வேக வைத்த முட்டை – 4 
  3. வெங்காயம் – 1
  4. தக்காளி – 1 
  5. பச்சை மிளகாய் – 2 -3 
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 மே.கரண்டி
  7. பிரியாணி மாசால பவுடர் – 2 மே.கரண்டி
  8. மிளகாய்தூள் – 1 மே.கரண்டி   
  9. பட்டை 1
  10. கிராம்பு 1
  11. ஏலக்காய் 1
  12. பிரிஜ்ஜி இலை – 1
  13. தேங்காய் பால் – 1/2 கப்
  14. உப்பு – தேவைக்கு
  15. நெய் - தேவையான அளவு
  16. எண்ணெய் – 1 குழி கரண்டி 
  17. கொத்தமல்லி - சிறுது
  18. புதினா - சிறிது

Instructions

  1. வேக வைத்த முட்டையினை சிறுது கீறி தனியாக வைக்கவும். அரிசியினை அலசி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஜ்ஜி இலை போட்டு வதக்கவும்.
  3. பிறகு மெல்லிய நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  4. நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது , இரண்டாக கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்றாக மசிந்து பச்சை வாடை போன பின்பு நறுக்கி வைத்த தக்காளி மற்றும் மசாலாதூள் வகைகளை சேர்க்கவும்.
  5. இதில் வேக வைத்த முட்டையினை சேர்த்து சிறுது நேரம் வதக்கி பின்பு முட்டையினை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்
  6. பிறகு அதில் ஒரு கப் அரிசி க்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொத்தி வந்த பின்பு ஊற வைத்த அரிசியினை அலசி தண்ணீர் வடிகட்டிவிட்டு சேர்க்கவும். 
  7. நன்றாக கரண்டி வைத்து கிண்டிவிட்டு மூடி போட்டு 10 நிமிடங்கள் அதிக தணலில் குக் பண்ணவும்.
  8. பிறகு அடுத்த 10 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும். பிறகு மூடியினை திறந்து எடுத்து வைத்த முட்டையினை மேலே வைத்து மூடி போட்டு சிறுது நேரம் வைத்துவிடவும். பிறகு முட்டையுடன் பரிமாரவும். 

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE