செட்டிநாடு சிக்கன் | Chettinad Chicken in Tamil

எழுதியவர் sweta biswal  |  9th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chettinad Chicken by sweta biswal at BetterButter
செட்டிநாடு சிக்கன்sweta biswal
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

344

0

செட்டிநாடு சிக்கன் recipe

செட்டிநாடு சிக்கன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Chicken in Tamil )

  • 3 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்டத் தேங்காய்
  • 1 சிட்டிகை ஜாதிக்காய்
  • 1 இதழ் ஜாதிக்காயின் மேல்தோடு
  • 1 இதழ் நட்சத்திர சோம்பு
  • 1 பச்சை ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1/2 இன்ச் இலவங்கப்பட்டை
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 2 சிவப்பு மிளகாய்
  • 1 தேக்கரண்டி கசகசா
  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 தேக்கரண்டி மல்லி
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • நறுக்கப்பட்ட கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 5 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  • 1 பெரிய தக்காளி
  • 1 பெரிய வெங்காயம் + 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  • 1/2 கிலோ தோலுரிக்கப்பட்ட சிக்கன்

செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி | How to make Chettinad Chicken in Tamil

  1. உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறுடன் சேர்த்து சிக்கனை பதப்படுத்தவும்.1-2 மணி நேரம் எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம் மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. நட்சத்திர சோம்பு, ஜாதிக்காயின் மேல்தோடு, ஜாதிக்காள், தேங்காய் அனைத்தையும் வெறுமனே வறுத்துக்கொள்ளவும்., (ஒவ்வொரு மசாலாவையும் தனித்தனியே தனித்தனி நறுமணத்தைத் தரும்வரை வறுப்பது நல்லது, ஆனால் ஒன்றுக்கு நேரம் குறைவாக இருந்தால், கருகவிடாமல் ஒன்றாக வறுக்கவும்).
  4. தேங்காயைத் தனியாக வெறுமனே வறுத்துக்கொள்ளவும். வறுத்த மசாலாவையும் தேங்காயையும் ஆறவிடவும். அதன்பிறகு சேர்த்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்க. இந்த பவுடரோடு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கறிவேப்பிலையையும் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்க்கவும். சிறு தீயில் வெங்காயம் வெளுக்கும்வரை வறுக்கவும்.
  6. ஜாதிக்காய், ஜாதிக்காயின் மேல்தோடு, நட்சத்திர சோம்புடன் மசாலா சாந்தைச் சேர்க்கவும். 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  7. மிளகாய்த் தூள், கொஞ்சம் உப்புடன் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும். தக்காளி மிருதுவாகி எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
  8. சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். நடுத்தர தீயில் 5-6 நிமிடங்களுக்கு வேகவைத்து ஒன்றல்லது இரண்டு முறை இடையிடையே கலக்கவும்.
  9. 1ல் இருந்து 1/2 கப் கொதி்க்கும் தண்ணீரை சிக்கனோடு சேர்த்து சிம்மில் 5-6 நிமிடங்கள் அல்லது சிக்கன் துண்டுகள் மென்மையாகும்வரை வைக்கவும். தீயை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  10. பரோட்டா/ஆப்பம் அல்லது சாதத்துடனும் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chettinad Chicken in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.