பூய்ஞ்சி | Puinji in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Puinji by Lakshmi Vasanth at BetterButter
பூய்ஞ்சிLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

66

0

பூய்ஞ்சி recipe

பூய்ஞ்சி தேவையான பொருட்கள் ( Ingredients to make Puinji in Tamil )

  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • வெல்லம் - 2 தேக்கரணடி
  • மஞ்சள் பொடி - 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • கடலை பருப்பு - 2தேக்கரண்டி
  • புளி (பழைய புளி நல்லது) - 2 உருண்டை எலுமிச்சை அளவு,
  • பச்சை மிளகாய் - 8
  • கடுகு - 2 தேக்கரண்டி
  • இஞ்சி பொடியாக நறுக்கப்பட்டது - 1கப்

பூய்ஞ்சி செய்வது எப்படி | How to make Puinji in Tamil

  1. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து அடர்த்தியான ஒரு சாந்தைத் தயாரிக்கவும். இஞ்சியையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து மஞ்சள்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். இப்போது புளிக்கரைசலை இவற்றோடு ஊற்றவும்.
  3. தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடி போட்டி 5 நிமிடங்கள் கலவையை நன்றாகக் கொதிக்கவிடவும். புளி பச்சை வாடை போகும்வரை கொதிக்கவிடவும், பாதி திடச் சாந்தாகக் குறைந்துவிடும்.
  4. இந்த நிலையில், வெல்லத்தைச் சேர்ப்பது கலவையைத் தளர்த்தும். கொதிக்க விடுவதைத் தொடரவும். வெல்லத்தால் பளபளப்பான வடிவம் கிடைக்கும். பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. நாம் ஊற்றிய எண்ணெய் கடாயில் உள்ள கலவையின் பக்கங்களில் வருவதைக் காண்பீர்கள். கலவை நன்றாக வெந்துவிட்டது என்று பொருள். தீயை நிறுத்தவும். ஆறவிட்டு ஒரு காற்றுப் புகாத பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  6. வெளியே 4-5 நாள்களுக்கு வைத்துக்கொள்ளலாம். அதிக அளவில் தயாரித்தால் - ஒரு பெரிய பகுதியை பிரிட்ஜில் வைத்து தினசரிப் பயன்பாட்டிற்குச் சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

Reviews for Puinji in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.