வீடு / சமையல் குறிப்பு / திரங்க ஆப்பம்

Photo of Tiranga Appe by Shreela Sasidharan at BetterButter
260
30
0.0(0)
0

திரங்க ஆப்பம்

May-12-2016
Shreela Sasidharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி மாவு - 1 +1/2 கப்
  2. கேரட் - நடுத்தர அளவு . மசிக்கப்பட்டது
  3. வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
  4. எண்ணெய் - தேவையான அளவு
  5. சாந்தாக அரைக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள், 1/4 கப் வதக்கப்பட்டு சாந்தாக்கப்பட்ட பசலிக்கீரை அல்லது தினசரி பச்சை கொத்துமல்லி/ புதினா இலை சட்டினி

வழிமுறைகள்

  1. மாவை 3 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
  2. பாகம் 1 - மசிக்கப்பட்ட கேரட்டோடு கலக்கவும்
  3. பாகம் 2 - பச்சைக் கலவையோடு கலந்துகொள்ளவும் - பச்சைப் பட்டாணி கலவை அல்லது பசலிக்கீரைக் கலவை அல்லது கீரையோடு நீங்கள் தயாரித்திருக்கவேண்டும்.
  4. பாகம் 3- அப்படியே எடுத்து வைக்கவும்
  5. இந்த வகையில் அனைத்து 3 நிறமேற்றப்பட்ட மாவுகளும் தயார்
  6. ஆப்பச் சட்டியைச் சூடுபடுத்தி, சூடானதும் சில துளிகள் எண்ணெய்யை ஒவ்வொரு குழியிலும் சேர்க்கவும்
  7. இப்போது கரண்டி முழுக்க வௌளை மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும், பாதியளவிற்கு மேலாக ஊற்றவும்.
  8. மூடி போட்டு இரண்டொரு நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. மூடியைத் திறந்து, திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் சில நிமிடங்கள் வேகவைக்கவும். அதிகம் வேகவைக்கக்கூடாது, வெள்ளை நிறம் பழுப்பாகி கருகிவிடும்
  10. மீதமுள்ள 2 பாகங்களுக்கும் இதையே செய்க - ஆரஞ்சு மற்றும் பச்சை
  11. 3 நிறங்களில் அனைத்து ஆப்பங்களும் தயார். ரிரங்கா ஆப்பம் தயார். உங்களுக்குப் பிடித்த சட்டினியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்