வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் மஞ்சூரியன் ரோஸ்ட்

Photo of Cauliflower manchurian roast by Subashini Krish at BetterButter
135
2
0.0(0)
0

காலிபிளவர் மஞ்சூரியன் ரோஸ்ட்

Jun-16-2018
Subashini Krish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் மஞ்சூரியன் ரோஸ்ட் செய்முறை பற்றி

காலிபிளவர் மஞ்சூரியன் செய்து தோசைக்குள் ஸ்டப் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் (நடுத்தரம்) 1
  2. மைதா மாவு 2 மேசைக் கரண்டி
  3. சோளமாவு ஒரு மேசைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  7. வெள்ளை எள் ஒரு தேக்கரண்டி
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. குடமிளகாய் 1
  10. பூண்டு 5 பல்
  11. பச்சைமிளகாய் 2
  12. சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
  13. தக்காளி சாஸ் ஒரு மேசைக்கரண்டி
  14. மிளகு தூள் அரை தேக்கரண்டி
  15. அலங்கரிக்க வெங்காயத்தாள் சிறிதளவு
  16. தோசை மாவு தேவையான அளவு
  17. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. மைதா மாவு சோள மாவு,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை எள்,உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணை ஊற்றி முறுகலாக பொரித்து வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின்பு நறுக்கிய குடமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பின்பு சோயா சாஸ் தக்காளி சாஸ் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
  7. பொரித்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  8. இறுதியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்
  9. நன்கு முறுகலான தோசை ஊற்றி தயாராக உள்ள காலிஃபிளவர் மஞ்சூரியன் ஸ்டஃப் செய்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்