வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறுப்பான நோக்ஷி பிட்தாக்கள்

Photo of Crunchy Nokshi Pithas by Hameed Nooh at BetterButter
384
3
0.0(0)
0

மொறுமொறுப்பான நோக்ஷி பிட்தாக்கள்

Jun-17-2018
Hameed Nooh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொறுமொறுப்பான நோக்ஷி பிட்தாக்கள் செய்முறை பற்றி

மாவை வளர்த்து அதில் அச்சுகளிட்டு சர்க்கரை பாகில் ஊற வைத்து சாப்பிடும் ஒரு சுவையான பலகாரமாகும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. தண்ணீர் தேவைக்கேற்ப
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவு மற்றும் உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்
  2. தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும்
  3. சூடு ஆறியதும் மாவை நன்கு பிசைந்து சமபாகங்களாகப் பிரித்து பந்துபோல் உருட்டி கொள்ளவும்
  4. பிறகு உருட்டிய பந்துகளை சப்பாத்தி பலகையில் தேய்த்து விரும்பிய வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்
  5. பிறகு அதிலேயே டூத் பிக் கொண்டு அச்சுகள் போன்ற படங்கள் வரையவும்
  6. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை பாகு செய்து கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிட்தாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் ஊற வைக்கவும்
  8. ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால் மொறுமொறுப்பான மற்றும் சுவையான நோக்ஷி பிட்தாக்கள் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்