குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல் | Gojju Avalakki/Tangy spiced poha in Tamil

எழுதியவர் Shashikala Teggi  |  17th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Gojju Avalakki/Tangy spiced poha by Shashikala Teggi at BetterButter
குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல்Shashikala Teggi
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

338

0

குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல் recipe

குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Gojju Avalakki/Tangy spiced poha in Tamil )

 • எண்ணெய் 3 தேக்கரண்டி
 • உப்பு
 • சிவப்பு மிளகாய் 3
 • கறிவேப்பிலை 2 டீக்கரண்டி
 • கடுகு 1/4 டீக்கரண்டி
 • உளுந்தம்பருப்பு 2 டீக்கரண்டி
 • கடலைப்பருப்பு 2 டீக்கரண்டி
 • வேர்க்கடலை 2 தேக்கரண்டி
 • மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
 • ரசப்பொடி 4 டீக்கரண்டி
 • தேங்காய் துருவல் 2 டீக்கரண்டி
 • வெல்லம் 1 தேக்கரண்டி
 • புளிக்கரைசல் 1 கப்
 • தடிமனான அவுல் 2 கப்

குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல் செய்வது எப்படி | How to make Gojju Avalakki/Tangy spiced poha in Tamil

 1. அவுலை நன்கு பொடியாக்கி, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. பாத்திரத்தில் எண்ணெயிட்டு அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து, பருப்பு பொன்னிறமாக வறுபடும் வரை வறுத்து, பிறகு அதில் கருவேப்பிலை, மஞ்சள்பொடி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெயை சூடேற்றி அதில் சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, புளிக்கரைசல், 1 கப் தண்ணீர், உப்பு, வெள்ளம், 4 தேக்கரண்டி ரசப்பொடி (உங்களுக்கு எவ்வளவு மசாலா தேவை என்ற விருப்பத்தின்படி) ஆகியவற்றை சேர்த்து, பிறகு அதை சுவைத்து பார்க்கவும். உங்களுக்கு தேவையான அளவிற்கு உப்பு, காரம் மற்றும் இனிப்பின் அளவை சேர்த்துக் கொள்ளலாம். அது கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த அவுலை சேர்த்து அதில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறவும்.
 4. குறிப்பு - ரசப்பொடிக்கு எனது ஐயங்கார் ரசப்பொடியைப் பார்க்கவும்.

Reviews for Gojju Avalakki/Tangy spiced poha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.