தேங்காய்ப்பால் சாதம் | Thenkai Pal Sadham or Coconut Milk Pulav in Tamil

எழுதியவர் Priya Mani  |  17th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Thenkai Pal Sadham or Coconut Milk Pulav by Priya Mani at BetterButter
தேங்காய்ப்பால் சாதம்Priya Mani
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

637

0

Video for key ingredients

    தேங்காய்ப்பால் சாதம் recipe

    தேங்காய்ப்பால் சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Thenkai Pal Sadham or Coconut Milk Pulav in Tamil )

    • சீரகம் 1/2 தேக்கரண்டி
    • புதினாவும் கொத்துமல்லியும் - ஒரு கொத்து (நறுக்கப்பட்டது)
    • பிளக்கப்பட்ட பச்சை மிளகாய் 4
    • முழு கரம் மசாலா : ஒவ்வொன்றும் 2
    • முந்திரி பருப்பு 1/2 கப்
    • தேங்காய் பால் 4 கப் (1:2 விகிதம்)
    • வெண்ணெய் /நெய் 2 தேக்கரண்டி
    • இஞ்சிப் பூண்டு விழுது 1 தேக்கரண்டி
    • மெலிதாக நறுக்கப்பட்ட வெங்காயம் 2
    • சுவைக்கேற்ற அளவு உப்பும் மிளகும்
    • பாஸ்மதி அரிசி 2 கப்

    தேங்காய்ப்பால் சாதம் செய்வது எப்படி | How to make Thenkai Pal Sadham or Coconut Milk Pulav in Tamil

    1. அரிசியை தேங்காய்ப்பாலில் ஊறவைக்கவும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால், ஒரு மணி நேரத்திற்கு.
    2. ஒரு கு்ககரில், வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருகவிட்டு, முழு கரம் மசாலா சேர்த்து வறுத்துக்கொள்ளவும். சீரகம் அதைத் தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வெங்காயம் வெளுக்கும் வரை வதக்கவும்.
    3. இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். பிளக்கப்பட்ட பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் காலக்கவும்.
    4. ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசிக்கு கூடுதல் தண்ணிர் தேவையில்லை. வதக்கியக் கலவையோது நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவையான உப்பு மிளகு சேர்த்துக்கொள்ளவும்.
    5. இறுதியாக 1 தேக்கரண்டி நெய் விட்டு கலந்துகொள்ளவும். மூடிபோட்டி 2 விசில்களுக்கு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.
    6. பிரஷர் முழுமையாக வெளியேற அனுமதிக்கவும். அரிசியை உடைக்காமல் மெதுவாக கலக்கி, ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அறையின் வெப்பத்தில் ஆறவிடவும். அப்போதுதான் ஒட்டாது.
    7. புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்து, எந்த ரைத்தாவோடும் அல்லது உங்களுக்குப் பிடித்த காரசாரமானக் குழம்போடும் பரிமாறவும்.

    எனது டிப்:

    நெய்யையும் அதிகமான முந்திரி பருப்பையும் சேர்க்கவும்.

    Reviews for Thenkai Pal Sadham or Coconut Milk Pulav in tamil (0)