செட்டிநாடு காளான் குழம்பு | Chettinadu Kaalan Curry in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  18th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chettinadu Kaalan Curry by Sindhu Sriram at BetterButter
செட்டிநாடு காளான் குழம்புSindhu Sriram
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

302

0

செட்டிநாடு காளான் குழம்பு recipe

செட்டிநாடு காளான் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinadu Kaalan Curry in Tamil )

 • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
 • மல்லி - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
 • கசகசா - 1/2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (பெடிக்கி மிளகாய் பயன்படுத்தினேன்)
 • மிளகு - 1/2 தேக்கரண்டி
 • ஏலக்காய் - 1
 • கிராம்பு - 2
 • துருவப்பட்டத் தேங்காய் - 2 தேக்கரண்டி
 • வெறுமனே வறுப்பதற்கு & அரைப்பதற்கு
 • கொத்துமல்லி - அலங்கரிப்பதற்கு
 • உப்பு- சுவைக்கேற்ற அளவு
 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • பே இலை - 2 எண்ணிக்கை
 • கறிவேப்பிலை - கையளவு
 • இஞ்சி - 2 துண்டு (நறுக்கப்பட்டது)
 • பூண்டு - 5 பற்கள் ( நறுக்கப்பட்டது)
 • தக்காளி - 2 (பொடியாக நறுக்கப்பட்டது)
 • சின்ன வெங்காயம் - 10 எண்ணிக்கை (சுத்தப்படுத்தப்பட்டு தோல் உரிக்கப்பட்டது)
 • காளான் - 250 கிராம்

செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி | How to make Chettinadu Kaalan Curry in Tamil

 1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி வெறுமனே வறுப்பதற்கு & அரைப்பதற்குக் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்துப் பொருள்களையும் சேர்க்கவும். வாசனை வரும்வரை வறுத்து மிருதுவான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
 2. அதே கடாயில், எண்ணெய் சேர்த்து & சூடுபடுத்தவும். பே இலை, பூண்டு, இஞ்சி & கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். 2 நிமிடங்கள்ககு வதக்கவும்.
 3. சின்னவெங்காயம் சேர்த்து அவை மிருதுவாகவும் பக்கங்கள் பொன்னிறமாகவும் மாறும்வரை வறுக்கவும். இப்போது காளான் சேர்த்து வறுக்கவும். காளான் தண்ணீர் விடுவதைக் காண்பீர்கள். தண்ணீர் முற்றிலுமாக உலரும் வரை வறுக்கவும். தக்காளியைப் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
 4. இந்த சமயத்தில், அரைத்த மசாலா, உப்பு & மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவை உலர்ந்துவிடும். உங்கள் விருப்பத்திற்கேற்ற பதத்தைப் பெறுவதற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு குழம்பு கொதிக்கவிடவும்.
 5. இறுதியாக கொத்துமல்லி சேர்த்து புல்கா, சப்பாத்தி அல்லது கல் தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

தேங்காயத் துருவல் கிடைக்கவில்லை என்றால் தேங்காயைக் கீற்றைக்கூட நீங்கள் சேர்க்கலாம். அப்படிச் சேர்க்கும்போது, மசாலாக்களுடன் மீண்டும் தேங்காய் கீற்றுகளை வறுக்காதீர். வறுத்த மசாலாக்களுடன் நேரடியாக அரைத்துக்கொள்ளவும்.

Reviews for Chettinadu Kaalan Curry in tamil (0)