மிளகுக் குழம்பு | Milagu Kuzhambu | Pepper Kuzhambu in Tamil

எழுதியவர் Sundari Pnp  |  21st May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Milagu Kuzhambu | Pepper Kuzhambu by Sundari Pnp at BetterButter
மிளகுக் குழம்புSundari Pnp
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

84

0

மிளகுக் குழம்பு recipe

மிளகுக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Milagu Kuzhambu | Pepper Kuzhambu in Tamil )

  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ற அளவு
  • மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
  • வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - கொஞ்சமாக ஒரு சிட்டிகை அளவு
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • கடுகு - 3/4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  • மல்லி - 2 தேக்கரண்டி
  • புளி - 1 சிறிய அளவு
  • காய்ந்த மிளகாய் - 4
  • கருமிளகு - 1.5 தேக்கரண்டி

மிளகுக் குழம்பு செய்வது எப்படி | How to make Milagu Kuzhambu | Pepper Kuzhambu in Tamil

  1. ஒரு கப் தண்ணீரில் புளியை ஊறவைத்து சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வேகமாகவும் எளிதாகவும் பிழிந்து எடுக்க வெந்நீரைப் பயன்படுத்தவும்.
  2. ஒரு கடாயைச் சூடுபடுத்திக்கொள்க. கருமிளகு, மல்லி, கடலை பருப்பு, சீரகத்தை சிறு தீயில் எண்ணெய் சேர்க்காமல் அவை பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும். ஒரு மிக்சியில் மென்மையானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  3. 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்க. சிறந்த ருசிக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்துக. கடுகு சேர்த்து பொரிக்கவிடவும். உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  4. புளிச்சாறு, அரைத்த பவுடர், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.
  5. குழம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தவும். அந்த சமயத்தில் அளவு பாதியாகக் குறைந்திருக்கவேண்டும்.

எனது டிப்:

அதை மேலும் ஆரோக்கியமானதாகத் தயாரிப்பதற்க அதிகமாக கறிவேப்பிலையை மிளகோடு நீங்கள் சேர்க்கலாம். அதிகமாக நீங்கள் அரைத்திருந்தால், அரைத்த பவுடரை பின்னர் பயன்படுத்துவதற்குச் சேமிக்கலாம். குழம்பிற்குப் போதுமான நேரத்தைக் கொதிப்பதற்குக் கொடுப்பது நறுமணமிக்க ஒரு மிளகுக் குழம்பைப் பெறுவதற்கான இரகசியமாகும்.

Reviews for Milagu Kuzhambu | Pepper Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.