வீடு / சமையல் குறிப்பு / மிளகுக் குழம்பு

Photo of Milagu Kuzhambu | Pepper Kuzhambu by Sundari Pnp at BetterButter
238
13
5.0(0)
0

மிளகுக் குழம்பு

May-21-2016
Sundari Pnp
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருமிளகு - 1.5 தேக்கரண்டி
  2. காய்ந்த மிளகாய் - 4
  3. புளி - 1 சிறிய அளவு
  4. மல்லி - 2 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. கடுகு - 3/4 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - கொஞ்சம்
  11. பெருங்காயம் - கொஞ்சமாக ஒரு சிட்டிகை அளவு
  12. வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
  14. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  15. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கப் தண்ணீரில் புளியை ஊறவைத்து சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வேகமாகவும் எளிதாகவும் பிழிந்து எடுக்க வெந்நீரைப் பயன்படுத்தவும்.
  2. ஒரு கடாயைச் சூடுபடுத்திக்கொள்க. கருமிளகு, மல்லி, கடலை பருப்பு, சீரகத்தை சிறு தீயில் எண்ணெய் சேர்க்காமல் அவை பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும். ஒரு மிக்சியில் மென்மையானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  3. 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்க. சிறந்த ருசிக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்துக. கடுகு சேர்த்து பொரிக்கவிடவும். உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  4. புளிச்சாறு, அரைத்த பவுடர், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.
  5. குழம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தவும். அந்த சமயத்தில் அளவு பாதியாகக் குறைந்திருக்கவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்