வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பஜ்ஜி

Photo of Milagai Bajji by Sundari Pnp at BetterButter
232
9
5.0(0)
0

மிளகாய் பஜ்ஜி

May-22-2016
Sundari Pnp
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புவனகிரி மிளகாய் (பஜ்ஜி மிளகாய்) - 15
  2. கடலை மாவு - 1 கப்
  3. சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. சமையல் சோடா - ஒரு சிட்டிகை
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. புவனகிரி மிளகாய்களைச் சுத்தப்படுத்தி உலர விடவும். மிளகாயை உடைக்காமல் படத்தில் காண்பித்தபடி மிளகாய்களை நேராகப் பிளந்துகொள்ளவும். விதைகளைக் கவனமாக ஒரு கத்தியின் உதவியால் நீக்கவும்.
  2. கடலை மாவு, சிவப்பு மிளகாய்த் தூள், சமையல் சோடா (விருப்பம் சார்ந்தது), உப்பு ஆகியவற்றை ஒரு கலவைப் பாத்திரத்தில் எடுத்து கலந்துகொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு சற்றே அடர்த்தியான பஜ்ஜி மாவாக இட்லி தோசை மாவின் பதத்திற்கு தயார் செய்துகொள்ளவும். மாவின் பதத்தினைச் சரிப்பார்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் பொரிப்பதற்காக எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும், புவனகிரி மிளகாய்களை ஒன்றன்பின் ஒன்றாக மாவில் மூழ்கச் செய்து எண்ணெயில் அவை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும். மிளகாய்கள் பஜ்ஜி மாவினால் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்