வீடு / சமையல் குறிப்பு / ரோட்டு கடை சால்னா

Photo of Roadside parota shop style salna by Jasmine Joshua at BetterButter
649
3
0.0(0)
0

ரோட்டு கடை சால்னா

Jun-27-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோட்டு கடை சால்னா செய்முறை பற்றி

பரோட்டாவுக்கு ரோட்டுக் கடையில் தரும் சால்னா பாணியில் வைத்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் மூன்று துண்டுகள்
  2. பல்லாரி பெரியது 3
  3. தக்காளி 2 பெரியது
  4. சின்ன வெங்காயம் 5
  5. இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப
  6. சோம்பு தேவையான அளவு
  7. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  8. கொத்தமல்லி பொடி 2 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  11. பச்சைமிளகாய் 2
  12. வேர்க்கடலை சிறிது
  13. முந்திரிப்பருப்பு சிறிது
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும் பின்பு அதில் தேங்காய் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. தேங்காய் பொன்னிறமானதும் தக்காளி வேர்க்கடலை முந்திரி ஆகியவற்றை சேர்த்து ஆறியதும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பல்லாரி மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்
  4. கரம்மசாலா கொத்தமல்லிப் பொடி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இவை நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்