வீடு / சமையல் குறிப்பு / கடலைப் பருப்பு அரைத்த பாயசம்

Photo of Bengal gram araitha payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
340
0
0.0(0)
0

கடலைப் பருப்பு அரைத்த பாயசம்

Jul-01-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப் பருப்பு அரைத்த பாயசம் செய்முறை பற்றி

விசேஷ நாட்களுக்கு எளிதில் செய்யும் பாயசம் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு கால் கப்
  2. வெல்லம் அரை கப்
  3. பால் அரை கப்
  4. ஏலப் பொடி 2 சிட்டிகை
  5. நெய் ஒரு தேக்கரண்டி
  6. முந்திரிபருப்பு 10

வழிமுறைகள்

  1. கடாயில் அரை தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்
  2. இன்னும் கூடுதலாக அரை தேக்கரண்டி நெய் விட்டு கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்
  3. அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் கால் கப் தண்ணீர் கொதிக்க வைக்கவும்
  4. வறுத்த கடலைப் பருப்பை கொதிக்கும் தண்ணீரை விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்
  5. தண்ணீரை வடிக்காமல் ஆற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  6. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  7. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  8. விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  9. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  10. கெட்டியாகும் நேரத்தில் அடுப்பை அணைத்து விட்டு பால் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்
  11. நெய்யில் வறுத்த முந்திரி கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்